Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூடானில் வாக்குப்பதிவு துவங்கியது: மன்னராட்சிக்கு முடிவு!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (12:15 IST)
பூடானின் முதல் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியுள்ளது. இத்தேர்தலின் மூலம ், 100 ஆண்டுகால மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்டு மக்களாட்சி மலர இருக்கிறது.

இந்திய முதன்மை தேர்தல் ஆணையர் கோபாலசாமி உட்பட சர்வதேச பார்வையாளர்களின் கண்காணிப்பில், 47 மக்களவை பிரதிநிதிகளுக்கான தேர்தல் துவங்கியுள்ளது. இத்தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பூடான் ஐக்கிய கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

' இத்தேர்தல் நமது அனைவருக்கும் வரலாற்று சிறப்புமிக்கது. தேர்தல் சுமுகமாக நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன' என்று பூடான் முதன்மை தேர்தல் ஆணையர் குன்சாங் வாங்டி கூறினார்.

இந்திய நேரப்படி, காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. நாடுமுழுவதிலும் 3 லட்சத்து 18 ஆயிரத்து 465 பேர் வாக்களிப்பதற்கு ஏதுவாக 865 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்களை இந்தியா வழங்கியுள்ளது.

பூடான் தேர்தலில் 'யாரும் ஓட்டுப்போடக்கூடாத ு' என்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அச்சுறுத்தியுள்ள நிலையில ், பலத்த பாதுகாப்புக்கு இடையே தேர்தல் நடந்து வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ராணுவம ், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாலை 4.30 மணியுடன் முடிவடையும் இத்தேர்தலில் பதிவான வாக்குகள் மாலையே எண்ணப்படுகிறது. இதனால ், இன்று இரவுக்குள் முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பூடானின் கடைசி மன்னரான ஜிக்மி சிங்கி வாங்சக் ஜனநாயக ஆட்சி அமைய ஆட்சி பொறுப்பை அமைச்சர்கள் குழுவிடம் ஒப்படைத்தார். புதியதாக தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசின் மூலம் பூடானில் மக்களாட்சி துவங்க இருக்கிறது. இதன்மூலம ், வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இன்றைய தேர்தலும் இடம் பெறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு.! தமிழக அரசு அறிக்கை..!!

தேர்தல் விதிமீறல்.! திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க.! அன்புமணி ஆவேசம்..!

Show comments