Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் பிரதம‌ர் வே‌ட்பாளராக யூசஃப் ராசா கிலானி தே‌ர்வு!

Webdunia
ஞாயிறு, 23 மார்ச் 2008 (14:02 IST)
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் யூ ச ஃப் ராசா கிலானியை பிரதமர் வேட்பாளராக அக்கட்சி அறிவித்துள்ளது!

நேற்று இரவு நடைபெற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் கணவர் ஆச ி ஃப் அலி ஜர்தாரி பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாததால் அப்பதவிக்கு தேர்ந்தெடுப்பதில் சட்ட ரீதியாக சிக்கல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவரும், பாகிஸ்தான் நாடாளுமன்ற முன்னாள் அவைத் தலைவருமான யூ ச ஃப் ராசா கிலானி பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நவாஸ் ஷெர ீ ஃப் கட்சியும் பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளதால், நாளை நடைபெறவுள்ள தேர்தலில் யூ ச ஃப் ராசா கிலானி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments