Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பிய யூனியனுக்கு பின் லேடன் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (10:59 IST)
இஸ்லாம் இறைத்தூதர் முகமது நபி பற்றிய கேலிச்சித்திரம் குறித்து அல்-க‌ய்டா தலைவர் பின் லேடன் ஐரோப்பிய யூனியனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‌ இது குறித்து இணையதளம் ஒன்றில் பின் லேட‌னி‌ன் ஒ‌லிநாடா வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளது. ஒ‌லிநாடா‌வி‌ல் பே‌சியு‌ள்ள ‌பி‌ன்ல‌ேட‌ன், "வாடிகன் நகர போப்பும் ஈடுபட்டுள்ள இது போன்ற கேலிச்சித்திர வெளியீட்ட ு நடவடிக்கைகள ் புனிதப் போர் தொடர்வதையே எடுத்துரைக்கிறது, முஸ்லிம்களை சோ‌தி‌க்‌கி‌றீ‌ர்க‌ள், இதன் விளைவுகளை‌ப் பா‌ர்‌க்க பய‌ங்கரமானதாக இரு‌க்கு‌ம்" என்று கூ‌றியு‌ள்ளா‌ன்.

மேலும் ஐரோப்பாவை பெரிய ஈட்டி ஒன்று துளைப்பது போலவும், ஆங்காங்கே ரத்தம் கொட்டியிருப்பது போலவுமான ஒரு அனிமேஷன் படத்தையும் வெளியிட்டுள்ளது அல் க‌ய்டா.

மேலும் பின் லேடன் அமெரிக்க ராணுவத்தின் இராக் ஊடுருவல் குறித்தும், நபிகள் பற்றிய கேலிச்சித்திரம் குறித்தும் கூறுகையில், "எங்களது அமைதியான கிராமங்களில் குண்டுகளை வீசி எங்கள் குழந்தைகளையும், பெண்களையும் கொல்வதை விடவும் கேலிச்சித்திரங்கள் வெளியிடுவது மிகப்பெரிய பாவமாகும்"

அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு ஆப்கானையும், இராக்கையும் ஆட்டிப்படைக்கும் ஐரோப்பிய நாடுகள் இந்த கொடுஞ்செயல்களின் பயங்க ர விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments