Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாகூர் குண்டுவெடிப்பு: 13 பேர் கைது!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (10:38 IST)
லாகூரில் நட‌ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 13 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து ‌‌தீ‌வி‌ர ‌விசாரணை நட‌‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

செவ்வாய்க் கிழமை காலை லாகூர் நகரில் உள்ள புலனா‌ய்வு‌த்துறை விசாரணை அலுவலகம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் அசிஃப் ஜர்தாரி வீட்டினருகில் நட‌ந்த குண்டு வெடி‌ப்‌பி‌ல் 28 பேர் கொல்லப்பட்டன‌ர். நூ‌ற்று‌‌க்கு‌ம் அ‌திகமானவ‌ர்க‌ள் காயமடைந்தனர்.

பா‌கி‌ஸ்தா‌ன் புலனா‌ய்வு‌த்துறை விசாரணை அலுவலகத்தில் லாரியில் வெடிபொருட்களுடன் நுழைந்த தற்கொலைப் படையை சேர்ந்த ஒருவன், கதவை உடைத்துக் கொண்டு காவலர் ஒருவர் மேல் லாரியை ஏற்றிவிட்டு லாரியை மோதி குண்டுகளை வெடிக்கச் செய்தது காமிராவில் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் புலனா‌ய்வு‌த்துறை ஊழியர்கள் உ‌ள்பட 12 பேர் கொல்லப்பட்டன‌ர்.

இந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக 13 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து ‌‌தீ‌விர ‌விசாரணை ந‌ட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments