Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஹ்ரைனில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (18:29 IST)
பஹ்ரைனில் இந்தியர்கள் உட்பட 600 தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 மாதங்களில் இந்த போராட்டம் இரண்டாவது முறையாகும்.

முகமது ஜலால் நிறுவனத்தை சேர்ந்த இந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி நேற்று முதல் வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளனர். இதுதவி ர, பஹ்ரைனில் உள்ள ஜாஜி ஹாசன் குழுமம் என்று கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்யும் இந்தியர்கள் உட்பட 1,120 ஆசிய தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அந்நாட்டு தொழிலாளர்கள் சங்க தலைவர் அப்துல்லா மிர்ஷா கூறுகையில ், “எங்களது கோரிக்கை மிகவும் சாதாரணமானது. இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் பஹ்ரைன் தொழிலாளாளர்களின் சம்பளத்தை 2.5 சதவீதமும ், அயல்நாட ு வாழ் தொழிலாளர்களின் ஊதியம் 66 அமெரிக்க டாலரும் உயர்த்த வேண்டும். பஹ்ரைன் நாட்டு சொந்த தொழிலாளர்கள் ஓட்டுநர ், விற்பனையாளரும் கூட 527 அமெரிக்க டாலரை ஊதியமாகவும ், மற்ற படிகளையும் பெறுகின்றனர். ஆனால ், அயல்நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் 132 டாலர் முதல் தான் ஊதியம் பெறுகின்றனர ்” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments