Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கர்கள் மத்தியில் இந்தியா பிரபலமான நாடு!

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (18:23 IST)
அமெரிக்கர்கள் மத்தியிலான பிரபலமான நாடுகள் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான ், ஆப்கானிஸ்தான் நாடுகள் மிகவும் பிரபலமில்லாத நாடுகள் பட்டியலில் உள்ளன.

18 வயதிற்கு மேற்பட்ட ஆயிரத்து ஏழு அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில ், 69 விழுக்காட்டினர் மத்தியில் இந்தியா பிரபலமான நாடாக உள்ளது. கனட ா, பிரிட்டன ், ஜெர்மன ், ஜப்பான் ஆகியவை பிரபலமான நாடுகளாக 80 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். பிரபலமில்லாத நாடுகள் பட்டியலில் ஈரான் முதல் இடத்தில் உள்ளது. இதில் 88 விழுக்காடு அமெரிக்கர்கள் எதிராக ஓட்டளித்துள்ள நிலையில ், 8 விழுக்காட்டினர் மட்டுமே ஈரானுக்கு சாதகமாக ஓட்டளித்துள்ளனர்.

பிரபலமற்ற நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 6-வது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தானுக்கு சாதகமாக 22 விழுக்காட்டினர் மட்டுமே ஒட்டளித்துள்ள நிலையில ், எதிராக 72 விழுக்காட்டினர் ஓட்டளித்துள்ளனர். இதே பட்டியலில் ஆப்கானிஸ்தான ், சவுதி அரேபிய ா, ஈராக் ஆகிய நாடுகளும் உள்ள ன.

அதனையடுத்த ு, வடகொரியாவுக்கு எதிராக 82 விழுக்காடும ், சாதகமாக 12 விழுக்காடும ், பாலஸ்தீனத்திறுக்கு எதிராக 75 விழுக்காடும ், சாதகமாக 14 விழுக்காடும் ஓட்டளித்துள்ளனர். அமெரிக்க போரிட்ட ஈராக் பிரபலமில்லாத நாடுகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்நாட்டிற்கு எதிராக 77 விழுக்காடும ், சாதகமாக 20 விழுக்காடும் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. பிரபலமில்லாத நாடுகள் பட்டியலில் சீனா 10-வது இடத்தில் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments