Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஷாரஃ‌ப்‌பி‌ற்கு மு‌க்‌கிய‌த்துவ‌த்தை குறை‌ப்பே‌ன்: ஹ‌ிலா‌ரி ‌கி‌ளி‌ண்ட‌ன்!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (20:22 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃ‌ப்புக்கு அமெரிக்கா அளித்துவரும் முக்கியத்துவத்துக்கு முடிவுக‌ட்டுவே‌ன் என்று ஹிலாரி கிளிண்டன் கூறினார்.

இதுகு‌றி‌த்து வாஷிங்டனில் ஹிலாரி கிளிண்டன் விடுத்துள்ள அறிக்கை‌யி‌ல், "அமெரிக்க அதிபராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் இந்தியா, பாகிஸ்தானுடன் சம அளவில் நிலையான நட்புறவை அமெரிக்கா பராமரிக்க நடவடி‌க்கை எடு‌ப்பே‌ன். ஆஃப்கானிஸ்தான் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு இத்தகைய நடவடிக்கைகள் மிக அவசியமாகும்.

பாகிஸ்தான் அதிபர் முஷாரஃ‌ப்புக்கு அமெரிக்கா அளித்து வரு‌ம் தேவையற்ற முக்கியத்துவத்தை முடிவுக்கு கொண்டு வருவேன். பாகிஸ்தானில் உள்ள இதர முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் முக்கியத்துவத்தை அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவேன். இது பாகிஸ்தானுடன் நட்புறவை நீண்டகாலத்துக்கு தக்கவைத்துக்கொள்ள உதவியாக அமையும்.

பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் ராணுவ உதவியை அமெரிக்கா அளித்து வருகிறது. ஆனால் இந்த நிதிக்கான கணக்கு விவரங்களை பாகிஸ்தான் அளிப்பதில்லை. நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த நிதியுதவிக்கான கணக்கு விவரங்களை சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தானிடம் கோருவேன்" எ‌ன்று கூ‌றியு‌‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments