Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குவைத்தில் இந்திய மருத்துவர்கள் பணி விலகல்!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (19:55 IST)
குவைத்தில் சமீபத்தில ் இந்தியாவைச் சே‌ர ்ந்த 14 மருத்துவர்கள் அந்நாட்டு சுகாதார அமைச்சக்கத்தின் பணியில் இருந்து விலகியுள்ளனர்.

இவர்கள் போதிய பதவி உயர்வு, திருப்தியான சம்பளம் இல்லாததால் வேலையை விட்டு விலகியதாக கூறியுள்ளனர்.

' எங்களது மருத்தவ பட்டம் இந்திய பல்கலைகழகங்களால் உரிய முறையில் சான்று அளிக்கப்படவில்லை என்றும ், இதனால ், 14 இந்திய மருத்துவர்கள ் ' சட்டவிரோதமானவர்கள ்' என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக இந்திய மருத்துவர் ஒருவர் அரபு நாட்டு பத்திரிக்கையிடம் கூறியுள்ளார்.

வேலையை விட்டு விலகிய மருத்துவர்களின் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட இந்திய அமைச்சகம் ஆய்வு செய்த ு, இதற்கு ஒரு தீர்வு காண சாதாரணமாக 8 மாதங்கள் ஆகலாம் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில ், இந்திய மருத்துவர் கூறுகையில ், குவைத் அரசு "வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும்போது உரிய முறையில் சான்றிதழ்களை ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால ், அப்போது அதை அவர்கள் செய்யவில்லை. குவைத் அரசின் செயல்பாடுகள் இந்திய மருத்துவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. சில மருத்துவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெறாமலேயே திரும்பி சென்று விட்டனர்.

பெரும்பாலான மருத்துவர்கள் இங்கு பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளனர ். ஆனால ், அவர்களுக்கு எந்த சலுகையும் கிடைக்கவில்ல ை. குவைத்தில் உள்ள இந்திய மருத்துவர் சங்கத்தை அணுக திட்டமிட்டுள்ளோம். அவர்கள் இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு இந்த பிரச்சனை‌க்கு விரைவில் முடிவு காண்பார்கள் என்று நம்புகிறோம ்" என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

Show comments