Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் பொது‌த் தே‌ர்த‌ல்: முஷாரஃ‌ப் ஆதரவாள‌ர்க‌ள் படுதோ‌ல்‌‌‌வி!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (13:17 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் பொது‌த ் தே‌ர்த‌லி‌ல ் அ‌திப‌ர ் முஷாரஃ‌ப்‌ ஆதரவாள‌ர்க‌ள ் படுதோ‌ல்‌வியை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ள்ளன‌ர ். இ‌துவர ை நட‌ந்து‌ள் ள வா‌க்க ு எ‌ண்‌‌ணி‌க்கை‌‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி 77 இட‌ங்களை‌க ் கை‌ப்ப‌ற்‌ற ி முத‌லிட‌த்‌திலு‌ம ், பா‌கி‌‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்) 62 இட‌ங்களை‌க ் கை‌ப்ப‌ற்‌ற ி 2 வத ு இட‌த்‌திலு‌ம ் உ‌ள்ளன‌ர ்.

இ‌ன்ற ு ம‌திய‌ம ் 12.30 ம‌ண ி ‌ நிலவர‌ப்பட ி பெனா‌சி‌ர ் பு‌ட்டோ‌வி‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி 77 இட‌ங்க‌ளிலு‌ம ், நவா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப்‌பி‌ன ் பா‌கி‌ஸ்தா‌‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்) 62 இட‌ங்க‌ளிலு‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் ( குலா‌த ி இ ஆச‌ம ்) 34 இட‌ங்க‌ளிலு‌ம ், மு‌த்தாத ா குவா‌ம ி இய‌க்க‌ம ் 16 இட‌ங்க‌ளிலு‌ம ், அவா‌ம ி தே‌சிய‌க ் க‌ட்‌ச ி 10 இட‌ங்க‌ளிலு‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி ( எ‌ஸ ்) 1 இட‌த்‌திலு‌ம ், பா‌கி‌ஸ்தா‌‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் ( எஃ‌ப ்) 4 இட‌ங்க‌ளிலு‌ம ், சுயே‌ட்சைக‌ள ் 21 இட‌ங்க‌ளிலு‌ம ் வெ‌ற்‌ற ி பெ‌ற்று‌ள்ளன‌ர ்.

தேர்தலில் முஷாரஃ‌ப ் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கிய ூ), மறைந்த பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) ஆகிய 3 கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

முஷாரஃப ்‌ பி‌ற்கு‌ப ் பெரு‌ம ் ச‌ரிவ ு!

சுமா‌ர ் 1 லட்சத்து 30 ஆயிர‌ம ் பாது‌கா‌ப்பு‌ப ் படை‌யின‌ரி‌ன ் க‌ண்கா‌ணி‌ப்புட‌ன ் பல‌த் த பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. மால ை 5.30 மணிக்கு வா‌க்கு‌ப ் ப‌திவ ு முடியு‌ம ் போத ு, சராச‌ரியா க 35 ‌ விழு‌‌க்காட ு வா‌க்குக‌ள ் பதிவாகி இருந்தது. இதையடு‌த்து‌ச ் சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கை துவ‌ங்கியது.

விடிய, விடிய வா‌க்குக‌ள ் எ‌ண்ண‌ப்ப‌ட் ட ‌ நிலை‌யி‌ல ், நள்ளிரவு 2 மணி முதல் முடிவுகள் வெள ி‌ யிட‌ப்ப‌ட்டன. நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்), பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆ‌கியவ‌ற்று‌க்க ு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூற‌ப்ப‌ட் ட கருத்துக் கணிப்புகள ி‌ ன ் அடி‌ப்படை‌யிலேய ே முடிவுக‌ள ் அமை‌ந்த ன.

நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் மொ‌த்த‌ம ் உள்ள 272 இடங்களில் 269 இட‌‌‌ங்களு‌க்கு தே‌ர்த‌ல் நடைபெ‌ற்றது. இ‌தி‌ல் 163 இடங்களின் முடிவுகள் காலை 9 மணிக்கு அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்ப‌ட்டன. இதில் நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 52 இடங்களை கைப்பற்றி முன்னிலை வகித்தது. பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 47 இடங்களைப் பிடித்து 2-வது இடத்தில் இரு‌ந்தது. ராவல்பிண்டி, பஞ்சாப் மற்றும் மத்திய மாகாண வாக்காளர்கள் பெருமளவில் நவாஸ் ஷெரீஃப் கட்சிக்கு வாக்களித்தது தெரியவந்துள்ளது. சிந்து மாகாணத்தில் பெனாசிர் கட்சி அதிக இடங்களைப் பெற்றுள்ளது.

முஷாரஃப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கிய ூ) கட்சி வேட்பாளர்கள் படுதோல்வியை சந்தித்தனர். காலை 9 மணி நிலவரப்படி முஷாரஃப் ஆதரவாளர்களில் 19 பேர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர். சிறிய கட்சிகள், சுயேட்சைகள் 45 இடங்களில் வெற்றி பெற்றனர்.

பாகிஸ்தானில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 137 உறுப்பினர்கள் தேவை. தேர்தல் முடிவுகளின்படி எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பா‌ன்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது.

அமை‌ச்ச‌ர்க‌ள் படுதோ‌ல்‌வி!

முஷாரஃப் ஆதரவாளர்களில் முக்கியத் தலைவர்களாகவும், அமை‌ச்ச‌ர்களாகவு‌ம் இருந்த பலர் படுதோல்வி அடை‌ந்து‌ள்ளன‌ர்.

பஞ்சாப் தொகுதியில் போட்டியிட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கிய ூ) கட்சித் தலைவர் சவுத்திரி சுஜத் ஹூசைனை, பெனாசிர் கட்சி வேட்பாளர் சவுத்திரி அகமது முக்தார் தோற்கடித்தார். இதனா‌ல் முஷாரஃப் ஆதரவாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கிய ூ) கட்சி‌யி‌ன் தலைவர்களில் ஒருவர் கூறுகையில், "தேர்தல் முடிவை நம்ப முடியவில்லை. கடும் அதிர்ச்சியாக உள்ளது'' என்றார்.

ராவ‌ல்‌பி‌ண்டி தொகுதியில் 7 தடவை வெற்றி பெற்றவரும், முஷாரஃப்பின் நம்பிக்கைக்கு உரியவருமான ஷேக் ரசீத் அகமதுவும் படுதோல்வியை சந்தித்தா‌ர். முஷாரஃப்பின் வலதுகரம் என்று வர்ணிக்கப்படும் ஜூபைதா ஜலால், செக்வடார் தொகுதியில் போட்டியி‌ட்ட சுயேட்சை வேட்பாளரிடம் தோ‌ற்றா‌ர்.

மாகாண‌ங்க‌ளி‌ல் முஷாரஃப் ஆதரவாள‌ர்க‌ள் தோ‌ல்‌வி!

நாடாளும‌ன்ற‌‌த்‌தி‌ற்கான பொதுத் தேர்தலுடன் நட‌ந்த பஞ்சாப், சிந்து, பெஷாவர், பலுசிஸ்தான் ஆகிய 4 மாகாண ச‌ட்ட‌ப் பேரவை‌த் தே‌ர்த‌ல்க‌ளிலு‌ம் முஷாரஃப் ஆதரவாள‌ர்க‌ள் பெரு‌ம் ச‌ரிவை‌ச் ச‌ந்‌தி‌த்தன‌ர்.

பஞ்சாப் மாகாணத்தில் மொத்தம் உள்ள 297 இடங்களில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 81 இடங்களை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. சிந்து மாகாணத்தில் மொ‌த்த‌ம் உ‌ள்ள 130 இடங்களில் பெனாசிர் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது.

இத‌ற்‌கிடை‌யி‌ல், மக்கள் அளித்த இந்த தீர்ப்பை ஏற்றுத் கொள்வதாக முஷாரஃப் ஆதரவு தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments