Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வி, வேலை வாய்ப்பில் இந்தியா பின்தங்கியுள்ளது: உலக வங்கி!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (17:53 IST)
' இந்திய சமுதாயத்தில் கல்வியிலும ், வேலைவாய்ப்பிலும் உடல் ஊனமுற்றோர் பின்தங்கியுள்ளனர். அவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன்மூலம் நாடே பயனடையும ்' என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் பெரும்பாலான உடல் ஊனமுற்றோர் வறுமையில் வாடும் சூழலே நிலவுகிறது. சராசரிக்கும் குறைவாகவே அவர்களுடம் உடமைகளும் உள்ள ன. நுகர்வு தன்மையும் நிலையிலேயே உள்ளது.

உடல் ஊனமுற்ற குழந்தைகள் ஆதிதிராவிட குழந்தைகளை விட ஐந்து மடங்கு பின்தங்கிய நிலையிலேயே அடிப்படைக் கல்வி பெறுகின்றனர். கல்வியறிவு பெற்ற ஊனமுற்றவர்களை பொருத்தவர ை, அவர்களது திறமை மிக உயர்ந்த விகிதத்தில் உள்ளது.

சாதாரணமானவர்களை வி ட, மிகக் குறைவாகவே அவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. கடந்த 1991-ம் ஆண்டில் 43 விழுக்காடாக இருந்த உடல் ஊனமுற்றோர்க்கான வேலை வாய்ப்பு விகிதம ், 2002- ம் ஆண்டில் 38 விழுக்காடாக குறைந்துள்ளது.

உலக வங்கி அறிக்கைக்கான முதன்மை ஆசிரியர் பிலிப் ஒகீபே கூறுகையில ், " அதிகரித்து வரும் சமூ க, பொருளாதார வளர்ச்சியில் ஊனமுற்றோர்க்கு சாதகமான வளங்களும ், வாய்ப்புகளும் கிடைக்க வேண்டியது அவசியம ்.

இந்தியாவிலுள்ள 40 முதல் 90 மில்லியன் உடல் ஊனமுற்றவர்களுக்கு உயர்ந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அளிப்பதனால் நாடே பயன்பெறும ். உடல் ஊனமுற்றோர்க்கு வசதியளிக்கும் போக்குவரத்த ு, கட்டுமானங்களின் வளர்ச்சியில் கற்பிணிகளும ், குழந்தைகளும ், முதியவர்களும் பயனடைவது இதற்கு ஒரு சிறந்த உதாரணம ்" என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments