Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறவை காய்ச்சல் எதிரொலி: இந்திய கோழிகளுக்கு பூடானில் தடை!

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2008 (17:30 IST)
மேற்கு வங ் கத்தில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதால ், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழ ி, முட்டைகளுக்கு பூடான் அரசு தடை விதித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பிர்பும ், பினாஜ்பூர் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் தீவிரத்தால ், 4 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ள ன. ஒரு பகுதியில் நோய் ஏற்பட்டாலும ், அது நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதிக்கும் பாதிப்பாக அமைந்து விடுகிறது. எனவ ே, ' பறவை காய்ச்சல் நோய் பீதியால ், நாமக்கல் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் முட்டை ஏற்றுமதியும் பாதிக்கப்படாமல் தடுக்க நாமக் க‌ல ்லை தனி மண்டலமாக அறிவிக்க வேண்டும ்' என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மத்திய அரசை வலியுறுத ்‌தி உள்ளது.

இந்நிலையில ், மேற்கு வங்கத்தில் பறவை காய்ச்சல் தீவிரத்தால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கோழ ி, முட்டைகளுக்கும் பூடான் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. காலவரையற்ற இந்த தடை உத்தரவு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

" இந்திய அரசு தங்களது நாட்டில் பறவை காய்ச்சல் இல்லை என்று அறிவிக்கும் வரை இந்த தடை அமலில் இருக்கும ்" என்று அந்நாட்டின் முதன்மை கால்நடைத்துறை அதிகாரி கர்மா டென்ஷின் அறிவித்துள்ளார்.

' இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 100 மெட்ரிக் டன் கோழிகளும ், 30 ஆயிரம் பெட்டி முட்டைகளும் பூடானுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. தற்போத ு, பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து இறக்குமதி உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளத ு' என்று பூடான் வேளாண்மை மற்றும் உணவு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments