Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஷாரஃப் மீது கண்டன தீர்மானம்: பெனா‌சி‌ர் கட்சி முடிவு!

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2007 (18:39 IST)
பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் முடிந்து புதிய நாடாளுமன்றம் செயல்பட தொடங்கியதும் அதிபர் முஷாரஃப் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வர‌ப்படு‌ம் எ‌ன்று முன்னாள் பிரதமர் பெனா‌சி‌‌ர் தலைமை‌யிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

இதுகு‌றி‌த்து பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்க‌ள் கட்சியின் தேர்தல் கண்காணிப்புப் பிரிவு‌த் தலைவரு‌ம ், நாடாளுமன்ற உறுப்பினருமான லத்தீப் கோஷா கூறுகை‌யி‌ல ், " அதிபர் முஷாரஃப் தனது ஆட்சி காலத்தில் பல்வேறு சட்ட மீறல்களை செய்துள்ளார். அரசியல் அமைப்புச் சட்டப்படி அவர் நடக்கவில்லை.

பொதுத் தேர்தல் முடிந்தவுடன் எதிர்க்கட்சிகள் அதிகளவில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அ‌ப்போது புதிய நாடாளுமன்றத்தில் முஷாரஃப் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும ்" எ‌ன்றா‌ர்.

அதேபோல, எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றால் ஜனநாயகத்துக்கு எதிரான அனைத்து சட்டத் திருத்தங்களும் நீக்கப்படும். முஷாரஃ‌ப்பின் ராணுவச் சட்டங்களை பாகிஸ்தான் மக்கள் கட்சி எப்போதும் எதிர்க்கும் என்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments