Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருதர‌ப்பு ந‌ல்லுறவு‌க்கு‌ள் அ‌ந்‌நிய ச‌க்‌திகளை அனும‌தி‌க்க‌க் கூடாது: ஈரா‌ன்!

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2007 (17:51 IST)
இ‌ந்‌தியாவு‌க்கு‌ம் ஈரானு‌க்கு‌‌ம் இடை‌யி‌ல் உ‌ள்ள ந‌ல்லுறவுகளை கெடு‌க்க முயலு‌ம் அ‌ந்‌நிய ச‌க்‌திக‌ளை இருநாடுகளு‌ம் அனும‌தி‌க்க‌க் கூ‌டாது எ‌ன்று ஈரா‌ன் அயலுறவு அமை‌ச்ச‌ர் மானுசெ‌ர் மொ‌ட்டகி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து டெ‌ஹ‌்ரா‌னி‌ல் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த அவ‌ர ், " இ‌ந்‌தியா‌வுட‌ன் எ‌ங்களு‌க்கு உ‌ள்ள ந‌ல்லுறவுகளை எ‌ந்தவொரு நா‌ட்டி‌ற்கு‌ம் எ‌திராக‌ப் பய‌ன்படு‌த்த நா‌ங்க‌ள் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை. அதே நேர‌த்‌தி‌ல் இருநாடுகளு‌க்கு‌ம் இடை‌யி‌லான உறவுகளை‌ச் ச‌ீ‌ர்குலை‌‌க்க முய‌லும் ‌சில அ‌‌ந்‌நிய ச‌க்‌திகளையு‌ம் க‌ண்டி‌ப்பாக அனும‌தி‌க்க முடியாத ு" எ‌ன்றா‌‌ர்.

மேலு‌ம ், ஈரானுட‌ன் உ‌ள்ள ந‌ல்லுறவுகளை‌‌க் கை‌விடுமாறு ‌சில ச‌ர்வதேச நாடுக‌ள் கொடு‌க்கு‌ம் ‌நி‌ர்‌ப்ப‌ந்த‌த்தை இ‌ந்‌தியா எ‌தி‌ர்‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌‌ம் மொ‌ட்ட‌கி வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

கட‌ந்த 28 ஆ‌ண்டுகளாக ஈரா‌னி‌ல் அமை‌ந்த எ‌ல்லா அரசுகளு‌ம் இ‌ந்‌தியாவுட‌ன் உ‌ள்ள ந‌ல்லுறவுகளை மே‌ம்படு‌த்துவத‌ற்கு ஆதரவாக இரு‌ந்தன. இ‌ந்‌நிலை‌யி‌ல் கட‌ந்த இர‌ண்டு ஆ‌ண்டுகளாக இருதர‌ப்பு‌ உறவுக‌ளி‌ல் தொ‌ய்வு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது கவலை அ‌ளி‌க்‌கிறது. இ‌ந்த உறவுகளை ‌மீ‌ண்டு‌ம் புது‌ப்‌பி‌க்க ‌தீ‌விர முய‌ற்‌சி எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌‌ர் அவ‌ர்.

ஈரா‌ன் ‌மீது பொருளாதார‌த் தடைகளை ‌வி‌தி‌ப்பத‌ற்கு ஒ‌த்துழை‌ப்பு கொடு‌க்குமாறு இ‌ந்‌தியாவை அமெ‌ரி‌க்கா வ‌ற்புறு‌த்‌தி வரு‌ம் ‌நிலை‌‌யி‌ல ், ஈரா‌னி‌ன் வே‌ண்டுகோ‌ள் மு‌க்‌கிய‌த்துவ‌ம் பெறு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு தேர்வில் 100-க்கு 101.66 மதிப்பெண்: முறைகேடு நடந்திருப்பதாக கூறி தேர்வர்கள் போராட்டம்..!

இந்தியா அமெரிக்காவுக்கு வரி விதித்தால், அமெரிக்காவும் இந்தியாவுக்கு வரி விதிக்கும்: டிரம்ப்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி கடலுக்குள் பாய்ந்த கார்.. சென்னை துறைமுகத்தில் பரபரப்பு..!

இன்று காலை 10 மணி வரை சென்னை உள்பட எத்தனை மாவட்டங்களில் கனமழை? வானிலை எச்சரிக்கை..!

கேரளாவில் இருந்து கொண்டு வந்த குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்: பிரேமலதா

Show comments