Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழாய் எரிவாயு- பாக், ஈரான் விரைவில் கையெழுத்து

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (14:37 IST)
குழாய் எரிவாயு திட்டத்தில் பாகிஸ்தான்- ஈரான் விரைவில் கையெழுத்திட உள்ளன.

முத்தரப்பு திட்டத்தின்படி, 2,600கி.மீ தூரத்திற்கு குழாய் அமைக்கப்பட்டு, ஈரானின் ஜியன்ட் தெற்கு பார்ஸில் இருந்து பாகிஸ்தான், இந்தியாவிற்கு எரிவாயு கொண்டு வர முடியும். இதற்காக ஈரான் தினமும் 60 மில்லியன் கீயூபிக் மீட்டர் எரிவாயுவை ஏற்றுமதி செய்யும்.

ஆனால், இந்த திட்டத்திற்கான விதிமுறைகளை இந்தியா ஏற்காத நிலையில், பாகிஸ்தான், ஈரான் நாடுகள் கையெழுத்திட உள்ளன.

" ஈரான் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதை அடுத்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை வளங்களுக்கான அமைச்சர் (பொறுப்பு) அசானுள்ளா கான் கூறியுள்ளார்.

" திட்டத்திற்கான ஏற்பாடுகள் திருப்தி தருவதாக உள்ளதாகவும், இரு நாடுகளுடனான பொருளாதாரம் மற்றும் வணிகத்தை இந்த ஒப்பந்தம் வலுப்படுத்தும்" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஈரான்-பாகிஸ்தான் மட்டுமே கையெழுத்திட உள்ள நிலையில், ரூ.28 ஆயிரத்து 86 கோடி செலவில் 1,035 கி.மீ தொலைவிற்கு எரிவாயு குழாய் அமைக்கப்பட உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments