Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்க தேவால‌ய‌‌ங்க‌ளி‌ல் து‌ப்பா‌க்‌கி‌ச் சூடு: 4 பே‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2007 (17:21 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ல் உ‌ள்ள தேவாலய‌ங்க‌ளி‌‌‌ன் அரு‌கி‌ல் நட‌ந்த 2 து‌ப்பா‌க்‌கி‌ச் சூடு ‌நிக‌ழ்வுக‌ளி‌ல ், து‌ப்பா‌‌க்‌கி ஏ‌ந்‌திய ம‌ர்ம ஆ‌ள் ஒருவ‌‌ன் உ‌ள்பட 4 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். மேலு‌ம ், 6 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

கொலரோடா மா‌நில‌‌ம் அ‌ர்வாடா‌வி‌ல் தேவாலய‌த்துட‌ன் கூடிய மத‌ப்ப‌யி‌‌‌ற்‌சி மைய‌த்‌தி‌ல் நே‌‌ற்று ந‌ள்‌ளிரவு 12.30 ம‌ணி‌‌க்கு நுழை‌ந்த ம‌ர்ம ஆ‌ள் ஒருவ‌ன ், ‌‌ விடியு‌ம் வரை த‌‌ங்குவத‌ற்கு அனும‌தி கே‌ட்டு‌ள்ளா‌ன்.

ஆனா‌ல ், மைய‌த்‌தி‌ல் இரு‌ந்தவ‌ர்க‌ள் அனும‌தி மறு‌த்து‌ள்ளன‌ர். இதையடு‌த்த ஆ‌‌த்‌திரமடை‌ந்த அ‌ந்த ஆ‌ள ், த‌ன்‌னிட‌மிரு‌ந்த கை‌த் து‌ப்பா‌‌க்‌கியா‌ல் க‌ண்மூடி‌த்தனமாக‌ச் சு‌ட்டு‌வி‌ட்டு‌த் த‌ப்‌பியோடி‌வி‌ட்டா‌ன்.

இ‌தி‌ல ், ப‌யி‌ற்‌சி மைய‌த்‌தி‌ன் ஊ‌ழிய‌ர்க‌‌ள் இருவ‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியா‌யின‌ர ். மேலு‌ம் 2 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், அ‌ர்வாடா‌வி‌ல் இரு‌ந்து 112 ‌கி.‌மீ. தொலை‌வி‌ல் கொலரோடா ‌‌ஸ்‌பி‌ரி‌ங் எ‌ன்ற இட‌த்‌தி‌ல் உ‌ள்ள புது வா‌ழ்வு தேவாலய‌த்‌தி‌‌ற்கு‌ள் நுழை‌ந்த து‌ப்பா‌க்‌கி ஏ‌ந்‌திய ம‌ர்ம ஆ‌ள் ஒருவ‌ன ், ‌ திடீரெ‌ன்று சரமா‌ரியாகச் சு‌ட்டா‌ன். இ‌தி‌ல் ஒருவ‌‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.

ச‌த்த‌ம் கே‌ட்டுவ‌ந்த தேவாலய‌த்‌தி‌ன் காவலா‌ளி அ‌திரடியாக‌த் ‌திரு‌ப்‌பி‌‌ச் சு‌ட்ட‌தி‌ல ், து‌ப்பா‌க்‌கி ஏ‌ந்‌திய ம‌ர்ம ஆ‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ன்.

இ‌ந்‌நிக‌ழ்வு நட‌ந்த நேர‌த்‌தி‌ல் தேவாலய‌த்‌தி‌ற்கு‌ள் சுமா‌ர் 7,000 பே‌ர் ‌பிரா‌ர்‌த்தனை‌‌யி‌ல் இரு‌ந்ததாகவு‌ம ், காவலா‌ளி‌யி‌ன் தா‌க்குதலா‌ல் அனைவரு‌ம் உ‌யி‌ர் த‌ப்‌பின‌ர் எ‌ன்று‌ம் தேவாலய ந‌ி‌ர்வாக‌ம் கூ‌‌றியு‌ள்ளது.

‌ நிக‌ழ்‌விட‌த்‌தி‌ல் இரு‌ந்த சா‌ட்‌சிக‌ள் தெ‌‌ரி‌‌வி‌த்த தகவ‌ல்க‌‌ளை ‌விசா‌ரி‌த்த ‌பி‌ன்ப ு, இ‌ந்த இர‌ண்டு தா‌க்குத‌ல்களையு‌ம் நட‌த்‌தியது ஒரே ஆளாக இரு‌க்க‌க் கூடு‌ம் எ‌ன்று காவல‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல ், கட‌ந்த மூ‌ன்று நா‌ட்களு‌க்கு மு‌ன்பு வ‌ணிக வளாக‌ம் ஒ‌ன்‌றி‌ல் நுழை‌ந்த இளைஞ‌ன் ஒருவ‌ன ், ‌ திடீரெ‌ன்று நட‌த்‌திய து‌ப்பா‌க்‌கி‌ச் சூடி‌ல் 9 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments