Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்று மாசுபாடு: சீனாவின் உள்நாட்டு உற்பத்தி 3.8 விழுக்காடு பாதிப்பு!

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (15:26 IST)
காற்று மாசுபாட்டால் சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 3.8 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளது. இது பல்வேறு நோய்களுக்கும ், உயிரிழப்புக்கும் அடிப்படையாக அமைந்துவிடும் என சீனாவை உலக வங்கி எச்சரித்துள்ளது.

நீர் - காற்று மாசு அடைந்திருப்பதன் மூலம் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில ், சீனா ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் (1 பில்லியன் = 100 கோடி) அளவுக்கு இழப்பைச் சந்தித்து வருகிறது. இது அதன் உள்நாட்டு உற்பத்தியில் 5.8 விழுக்காடாகும். நீர் மாசுபாட்டை விட காற்று மாசுபாடு அதிக இழப்பை ஏற்படுத்தும் என்று சீனா-மங்கோலியாவுக்கான உலக வங்கி இயக்குநர் டேவிட் டாலர் கூறியுள்ளார்.

சீனாவின் பெரிய நகரங்களில் காற்று மாசுபாட்டால் மக்களுக்கு நுரையீரல் புற்றுநோய ், மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படுகிறது. இதனால் ஏராளமான தொழிலாளர்களூம ், மாணவர்களும் அதிகளவில் விடுப்பு எடுப்பதாகவும் அவர் கூறினார்.

காற்று மாசுபடுதலைத் தடுக்க நகரின் மையப் பகுதியில் உள்ள உற்பத்தி நிலையங்களை புறநகர் பகுதிகளுக்கு மாற்ற வேண்டும். அதேப் போன்று கரி அடுப்புகளை மாற்றி விட்டு திரவ எரிவாயு அடுப்புகளை உபயோகிக்க வேண்டும ். அரசு போக்குவரத்து துறையில் அதிக முதலீடு செய்வதுடன் தனியார் கார் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் டேவிட் டாலர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments