Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'என்னைப் பதவிவிலகச் சொல்ல பெனாசிருக்கு உரிமையில்லை': முஷாரஃப் பதிலடி!

Webdunia
புதன், 14 நவம்பர் 2007 (13:30 IST)
' அதிபர் பதவியிலிருந்தோ அல்லது ராணுவத் தளபதி பதவியிலிருந்தோ என்னை விலகச் சொல்வதற்கு பெனாசிர் புட்டோவிற்கு உரிமையில்ல ை' என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அதிபர் என்ற பதவியில் இருந்து முஷாரஃப் உடனடியாக விலக வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள முஷாரஃப ், '' பெனாசிர் ஒருவேளை பாகிஸ்தானுடன் தனக்குள்ள உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளும் எண்ணத்தில் வந்திருந்தால் நிலைத்து நிற்க முடியும். ஆனால் அவர் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார். எனவே இது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று நான் பயப்படுகிறேன ்'' கூறியுள்ளார்.

பெனாசிரை வீட்டுச்சிறையில் வைத்தற்குபெனாசிர்தான் காரணம ். பஞ்சாப் முதல்வர் செளத்ரி பர்வேஷ் எலாஹி தனக்கெதிராகச் சதி செய்கிறார் என்று பெனாசிர் தெரிவித்தார். எனவே அவரைப் பாதுகாப்பதற்காகவே வீட்டுச் சிறையில் வைத்தோம். இல்லையென்றால் அரசை அவர் குற்றம்சாற்றுவார் எனறார் முஷாரஃப்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments