Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃப்கானில் தற்கொலைத் தாக்குதல் : 90 பேர் பலி!

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (20:35 IST)
ஆஃப்கானிஸ்தானின் வடபகுதியில் உள்ள பாக்லான் நகருக்கு வந்த அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டனர்!

இத்தாக்குதலில் கொல்லப்பட்ட 90 பேரின் உடல் பாக்லான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அம்மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கலீலுல்லா கூறினார்.

படுகாயமுற்ற 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதகாவும் கலீலுள்ள கூறியுள்ளார்.

இத்தாக்குதலில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு அந்நாட்டு நாடாளுமன்ற எதிர்க்கட்சி பேச்சாளர் முஸ்தபா கசீமியும் கொல்லப்பட்டதாக பாக்லான் மாகாண உளவுத்துறை தலைவர் அப்துர் ரஹ்மான் சையீத் கைல் கூறியுள்ளார்.

இத்தாக்குதல் மிகக் கொடூரமானது என்றும், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அப்துர் ரஹ்மான் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் ஆ ·ப்கானில் நடந்த 130 தற்கொலைத் தாக்குதல்களில் இதுவே மிகக் கொடூரமானது என்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments