Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌‌லிக‌ளி‌ன் பு‌திய அர‌சிய‌ல் தலைவராக நடேச‌ன் ‌நியமன‌ம்!

Webdunia
சனி, 3 நவம்பர் 2007 (18:49 IST)
த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் பு‌திய அர‌சிய‌ல் பிரிவுத் தலைவராக ‌பி. நடேச‌ன் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

இல‌ங்கை‌யி‌ல் ‌சி‌றில‌ங்கா ‌விமான‌ப்படை நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் அர‌சிய‌ல் பிரிவுத் தலைவ‌ர் சு.ப.த‌மி‌ழ்செ‌ல்வ‌ன் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து அ‌ப்பொறு‌ப்‌பி‌ற்கு நடேச‌ன் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளா‌ர் எ‌ன்று த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் தலைமை‌ச் செயலக‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது. நடேச‌ன் த‌ற்போது த‌மி‌ழீழ‌க் காவ‌ல் துறை‌ப் தலைமைப் பொறு‌ப்பு வ‌கி‌த்து வரு‌கிறா‌ர்.

இவ‌ர ், இயக்கத்தின ் கருத்த ை உல க அரங்கில ் எடுத்துரைக்கும ் விதமாகவும ், அரசியல ் ரீதியா க வழ ி நடத்திச ் செல்லு‌ம் வகை‌யிலு‌ம் தொட‌ர்‌ந்து ப‌ணியா‌‌ற்றுவா‌ர் எ‌ன்று ‌விடுதலை‌ப்பு‌லிக‌ளி‌ன் ராணுவ பேச்சாளர் ராசையா இள‌ந்‌திரைய‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மு‌ன்னதாக ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இய‌க்க‌த் தலைவ‌ர் ‌பிரபாகர‌ன் மறை‌ந்த த‌மி‌ழ்செ‌‌ல்வ‌னி‌ன் இ‌ல்ல‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ன்று அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தினா‌ர். பி‌ன்ன‌ர ், ‌ சி‌றில‌ங்க ‌விமான‌ப்படை‌யி‌ன் தா‌க்குத‌லி‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ம‌ற்ற போரா‌ளிக‌ளி‌ன் இ‌ல்ல‌ங்களு‌க்கு‌ம் செ‌ன்று அவ‌‌ர்க‌ளி‌ன் உற‌வின‌ர்களோடு இணை‌ந்து அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தினா‌ர் எ‌ன்று‌ இள‌ந்‌திரைய‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ‌ நே‌ற்று நடைபெ‌ற்ற தா‌க்குத‌லி‌ல் ‌கி‌ளிநொ‌ச்‌சி‌யி‌ல் க‌ட்டுறரைக்குள‌ம் உ‌ள்‌ளி‌ட்ட பு‌லிக‌ளி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌ப் பகு‌திக‌‌ள் ‌சிலவ‌ற்றை‌க் கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளதாக ‌சி‌றில‌ங்க பாதுகா‌ப்பு அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதை ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் மறு‌த்து‌ள்ளன‌ர். அங்கு நடந்த தா‌க்குத‌லி‌ன் இறு‌திவரை தான் அ‌ங்‌கிரு‌ந்து ப‌ணி பு‌ரி‌ந்ததாக ராசா இள‌ந்‌திரைய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments