Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா‌வி‌ல் கு‌ற்ற‌ங்க‌ள் ஊ‌க்குவி‌க்க‌ப்படு‌கி‌ன்றன : ஐ.நா கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (16:02 IST)
‌ சி‌றில‌ங்க அர‌சு உருவா‌க்‌‌கியு‌ள்ள வ‌ன்முறை‌க்கு எ‌திரான ச‌‌ட்ட‌த்‌தி‌ல் கு‌ற்ற‌ங்களு‌க்கு கூற‌ப்படு‌ம் காரண‌ங்க‌ள் கு‌ற்ற‌ங்களை ஊ‌க்கு‌வி‌ப்பதாக உ‌ள்ளதா‌ல் ‌அந்நாட்டில் ம‌‌னித உ‌ரிமை ‌மீற‌ல்க‌ள ், வ‌ன்முறைக‌ள் அ‌திக‌ரி‌த்து வரு‌கி‌ன்றன எ‌ன்று ஐ.நா குற்றம்சாற்றியுள்ளது.

‌ சி‌றில‌ங்கா‌வி‌ல் சு‌ற்று‌ப்பயண‌ம் மே‌ற்கொ‌ண்ட ஐ‌க்‌கிய நாடுக‌ள் அவை‌யி‌ன் ம‌னித உ‌ரிமைக‌ள் ‌சிற‌ப்பு‌ ‌பிர‌தி‌‌நி‌தி ம‌ன்‌பிர‌ட் நோவா‌க் தெ‌ரி‌வி‌த்த ‌விவர‌ங்க‌ள் வருமாற ு:

கட‌ந்த 1-ஆ‌ம் தே‌தி முத‌ல் 8-ஆ‌ம் தே‌தி வரை ‌சி‌றில‌ங்கா‌வி‌ல் சு‌ற்று‌ப்பயண‌ம் மே‌ற்கொ‌ண்டே‌ன். அ‌ப்போது அ‌ங்கு‌ள்ள ‌சிறைக‌ளி‌ல் ‌விசாரணை‌க் கை‌திகளாக உ‌ள்ளவ‌ர்க‌ளிட‌ம் இரு‌ந்து அ‌திகள‌விலான புகா‌ர்களை‌ப் பெ‌ற்றே‌‌‌ன்.

அ‌தி‌ல் ‌விசாரணை எ‌ன்ற பெய‌ரி‌ல் காவ‌ல்துறை‌யினரு‌ம ், ராணுவ‌த்‌தினரு‌ம் த‌‌ங்களை ‌மிகவு‌ம் கொடுமை‌ப்படு‌த்துவதாக‌த் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தன‌ர்.

கட‌ந்த 1994-ஆ‌ம் ஆ‌ண்‌டு ‌சி‌றில‌ங்கா அரசு உருவா‌க்‌கிய வ‌ன்முறைகளு‌க்கு எ‌திரான ச‌ட்ட‌த்‌தி‌ல் ‌சி‌த்ரவதைக‌ள் செய்வது த‌ண்டனை‌க்கு‌ரிய கு‌ற்றமாகு‌ம் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஆனா‌ல ், அ‌தி‌ல் கு‌ற்ற‌ங்களு‌க்கா‌க‌க் கூற‌ப்படு‌ம் காரண‌ங்க‌ள் பல குற்றச் செயலை ஊ‌க்கு‌வி‌ப்பதாகவே உ‌ள்ளன. இதுவரை அ‌ச்ச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் 3 பே‌ர் ம‌ட்டுமே த‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ல் வ‌ன்முறைக‌ள் தொட‌ர்பாக‌த் தொடர‌ப்படும் வழ‌க்குக‌ளி‌ல் போ‌திய ஆதார‌ங்க‌ள் தா‌க்க‌ல் செ‌ய்யப்படு‌கி‌ன்றன. ஆனா‌ல் கு‌ற்ற‌ங்களு‌‌க்கான காரண‌ங்களை‌க் கரு‌த்‌தி‌ல் கொ‌ள்ளு‌ம்போது கு‌ற்றவா‌ளிகளை ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளா‌ல் த‌ண்டி‌க்க முடிவ‌தி‌ல்லை எ‌ன்பது வரு‌த்த‌த்‌தி‌ற்கு உ‌ரியது.

சிறைக‌ளி‌ல் நெரு‌‌க்கடி அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. ‌கு‌ற்றவா‌ளிகளை‌‌விட ‌விசாரணை‌க் கை‌திக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திகமாக உ‌ள்ளது. 8,200 பே‌ர் கொ‌ள்ளளவு கொ‌ண்ட ‌சிறை‌யி‌ல் 28,000 பே‌ர் அடை‌த்து வை‌க்க‌ப்ப‌ட்டுளளன‌ர்.

கு‌‌ற்ற‌‌ம் ‌நிரூ‌பி‌க்க‌ப்படு‌ம் அ‌திகா‌ரிகளைப் பத‌வி‌யி‌லிரு‌ந்து ‌நீ‌க்குவதாக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. ஆனா‌ல் அவ‌ர்களை‌ப் பத‌வி ‌நீ‌க்குவதுட‌ன் ச‌ட்ட‌த்‌தி‌ன் மு‌ன்பு ‌நிறு‌த்த வே‌ண்டு‌‌ம்.

பயங்கரவாதத்திற்க ு எதிரா ன நடவடிக்க ை என் ற பெயரில ் துன்புறுத்தல்கள ் தொடர்ந்த ு மேற்கொள்ளப்படுகின்ற ன. சிறிலங்காவின ் தேசி ய மனி த உரிம ை ஆணைக்குழு‌வி‌ற்கு நாள்தோறும் புகா‌ர்க‌ள் வரு‌கி‌ன்றன. இத ு நாட ு முழுவதும் ‌‌நிலைமை மோசமாக ி வருவதையே காட்டுகிறத ு.

இ‌வ்வாறு அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments