Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌இல‌ங்கை‌யி‌ல் ராணுவ ஆ‌ட்‌சியை அரசு ‌விரு‌ம்பு‌கிறது : ஐ‌க்‌கிய தே‌சிய‌க் க‌ட்‌சி கு‌ற்ற‌‌ச்சா‌ற்று!

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2007 (16:57 IST)
நாடு முழுவது‌ம் ராணுவ ஆ‌ட்‌சியை‌க் கொ‌ண்டுவர ‌‌சி‌றில‌ங்கா அ‌திப‌ர் ம‌கி‌ந்த ராஜப‌க்ச ‌விரு‌ம்பு‌கிறா‌ர் எ‌ன்று ஐ‌க்‌கிய தே‌சிய‌க் க‌ட்‌சி கு‌ற்ற‌‌ம்சா‌ற்‌றியு‌ள்ளது.

ஐ‌க்‌கிய தே‌சிய‌க் க‌ட்‌சியை‌ச் சே‌ர்‌ந்த அனுராதபுர‌ம் தொகு‌தி நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ‌பி.ஹ‌ரிச‌ன் ‌பி.‌பி.‌‌சி ‌நிறுவன‌த்‌தி‌ற்கு அ‌ளி‌த்து‌ள்ள நே‌ர்காண‌லி‌ல் கூ‌றி‌‌யிரு‌ப்பதாவத ு:

அனுராதபுர‌த்‌தி‌ல் பாதுகா‌ப்பு ஏ‌ற்பாடுக‌ள் முழுவதையு‌ம் ராணுவ‌த்‌திட‌ம் ‌சி‌றில‌ங்கா அரசு ஒ‌ப்ப‌டை‌த்து‌ள்ளது. இத‌ன்முல‌ம் ராணுவ ஆ‌ட்‌சியை அ‌திப‌ர் ம‌கி‌ந்த ராஜப‌க்ச ‌விரு‌ம்பு‌கிறா‌ர் எ‌ன்பது தெ‌ளிவா‌கிறது.

குருநாக‌ல ், க‌ண்டி போ‌ன்ற பகு‌திக‌ளி‌ல் தா‌க்குத‌ல் நடைபெ‌ற்றா‌‌ல் அ‌வ‌ற்‌றி‌ன் பாதுகா‌ப்பு‌ம் ராணுவ‌த்‌திட‌ம் ஒ‌ப்படை‌க்க‌ப்படு‌ம். அத‌ன்மூல‌ம் படி‌ப்படியாக நாடு முழுவதையு‌ம் ராணுவ‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் கொ‌ண்டுவரும் ஆபத்து உள்ளது.

கட‌ந்த 20 ஆ‌ண்டுகளாக நடைபெ‌ற்றுவரு‌ம் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ‌சி‌றில‌ங்கா தர‌ப்பு‌க்கு எ‌ந்தவொரு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்க வெ‌ற்‌றியு‌ம் ‌கிடை‌க்க‌வி‌ல்லை.

இன‌ப்‌பிர‌ச்சனைகளு‌க்கு பே‌ச்சின் மூலமே ‌தீ‌ர்வு காண‌ப்பட வே‌ண்டு‌ம். ஆனா‌ல் அத‌ற்கான முய‌ற்‌‌சிக‌ள் எடு‌க்க‌ப்படுவதாக‌த் தெ‌ரிய‌வி‌ல்லை எ‌ன்றா‌ர் அவ‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments