Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் எர்த்தை பயன்படுத்தும் பாலஸ்தீன தீவிரவாதிகள்

Webdunia
சனி, 27 அக்டோபர் 2007 (12:39 IST)
இஸ்ரேல் இலக்குகளை ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்த கூகுள் எர்த் என்ற உலக சாட்டிலைட் வரைபட இணையத ளத்தை பாலஸ்தீன தீவிரவாதிகள் பயன்படுத்துவதாக பத்திரிக்கை செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

காஸாவில் உள்ள தீவிரவாதிகள் அங்கிருந்து இஸ்ரேலின் குறிப்பிட்ட இலக்குகள் மீது ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்த கூகுள் எர்த்தை பயன்படுத்துகின்றனர் என்று அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக 2006ஆம் ஆண்டு ஏமனில் உள்ள எண்ணெய்க் கிணறுகளை தாக்க கூகுள் எர்த் பயன்படுத்தப்பட்டத ு, ஆனால் அது தோல்வியில் முடிவடைந்ததாக தி டெலிகிராப் பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது.

நடப்பு ஆண்டின் ஜனவரி மாதத்தில் இராக் தீவிரவாதிகள் பாஸ்ரா நகரில் உள்ள பிரிட்டிஷ் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த கூகுள் எர்த் இணையதளத்தை பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாக கூகுள் எர்த் தற்போது அந்த படங்களை தங்கள் இணையதளத்திலிருந்து நீக்கி விட்டு போருக்கு முந்தையதான சில ப ட‌ங ்களை மாற்றி வைத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments