Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2007 (21:05 IST)
தென் ஆப்ரிக்க அரசு கடைபிடித்த இனவெறியை எதிர்த்துப் போராடியதால் அந்நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டவரும், இனங்களுக்கு இடையேயுள்ள தீரா பகைமையை தனது புதினங்களின் மூலம் முழுமையான பரிசீலனைக்கு உட்படுத்திய இங்கிலாந்து பெண் எழுத்தாளர் டோரிஸ் லெஸ்ஸிங் இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

ஜிம்பாப்வேயில் பிறந்து பிறகு இங்கிலாந்தில் குடியேறி வாழ்ந்துவரும் டோரிஸ் லெஸ்ஸிங் தனது 14 வயதிலேயே பள்ளிப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தவர். பல்வேறு பணிகளில் ஈடுபட்டு பிறகு இதழியலாளராக பணியாற்றி கிடைத்த அனுபவத்தைக் கொண்டு சிறு கதைகளை எழுதி மக்களின் கவனத்தை ஈர்த்தவர். இவர், தனது 31வது வயதில் எழுதி வெளியிட்ட புற்கள் பாடுகின்றன (The Grass is Singng) ஒரு வெள்ளையரின் மனைவிக்கும், கறுப்பினத்தைச் சேர்ந்த ஒரு ஊழியனுக்கும் இடையிலான உறவை சித்தரித்து எழுத்தப்பட்டதாகும். இன வேற்றுமை என்பது எந்தவிதத்திலும் சமரசப்படுத்த முடியாது என்பதனை அந்த நாவல் வெளிப்படுத்தியது.

அதன்பிறகு பல நாவல்களை எழுதிய டோரிஸ் லெஸ்ஸிங், 1962ல் எழுதி வெளியிட்ட த கோல்டன் நோட்புக் என்ற புதினத்தால் புகழ்பெற்றார். ஆண், பெண் உறவின் ஆழத்தை அலசியது அந்தப் புதினம். ஆண், பெண் உறவில் எவ்வாறு அரசியலும், உணர்ச்சிகளும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதனை மிக அழகாக வெளிப்படுத்தினார்.

பெண் விடுதலைக்காக மிகவும் குரல் கொடுத்த டோரிஸ், 1985ல் வெளியிட்ட 'நல்ல பயங்கரவாதி' எனும் நாவலும், தனது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதி 'எனது தோலின் கீழ்' (1994), 'நிழலில் நடப்பது' (1997) போன்றவை அவரின் ஆழ்ந்த உணர்வுத் திறனை வெளிப்படுத்தின.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments