Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்க்டிக் பகுதிகளில் உருகும் பனிப்பாறைகள்-விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (13:05 IST)
உலகின் துருவப் பகுதியான ஆர்க்டிக்கில் கடலில் உள்ள பனிக்கட்டிகளின் அளவு 1.59 மில்லியன் சதுர மைல்கள் அல்லது 4.13 மில்லியன் சதுர கிலோ மீட்டர்களாக குறைந்துள்ளது.

அமெரிக்காவின் கொலொராடோ பல்கலைக்கழகத்தின் பூல்டர் தேசிய பனி மற்றும் பனிக்கட்டி தரவு மைய விஞ்ஞானிகள் சாட்டிலைட் உதவியுடன் கிடைத்த படங்களை வைத்து இந்த அதிர்ச்சிகர உண்மையை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளாக கடல்பகுதியில் பனி அளவை சாட்டிலைட் மூலம் கணக்கிட்டு வருகின்றனர் விஞ்ஞானிகள். செப்டம்பர் 16ம் தேதி இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆர்க்டிக் கடல்மேற்பரப்பில் பனிப்பரப்பளவு இப்போது அதன் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது என்று கூறுகின்றனர்.

அதாவது 1979- 2000 ஆம் ஆண்டுகளுக்கிடையே நடத்தப்பட்ட கணக்கீட்டின்படி பார்க்கும்போது தற்போது ஒரு மில்லியன் சதுர மைல்கள் பனி உருகியுள்ளன என்கின்றனர் இவர்கள். இது சாதாரண விஷயமல்ல. உருகிய பனியின் அளவு அலாஸ்கா மற்றும் டெக்சாசின் பரப்பளவு அல்லது 10 பிரிட்டனின் பரப்பளவு என்கின்றனர் இவர்கள்.

ஆர்க்டிக் கடல் மேற்பரப்பில் 15 சதவீதம் பனிப்பறைகள்தான் உள்ளன. இந்த அளவிற்கு பனி உருகுவதற்கு காரணம் பூமி வெப்பமடைதல்தான் என்கின்றனர் இவர்கள். இதற்குக் காரணம் கிரீன் ஹவுஸ் வாயுக்களே என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்த கிரீன் ஹவுஸ் வாயுக்கள் ஆர்க்டிக் பகுதியில் 2 முதல் 7 பாரன் ஹீட் வரை வெப்பத்தை அதிகரித்துள்ளன.

விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பிற்காக நாசா, நேஷனல் ஓசியானிக் அன்ட் அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் அமெரிக்க ராணுவ அமைச்சகம் மற்றும் கனடா நாட்டு சாட்டிலைட் வசதிகள் மற்றும் வானிலை அறிவிப்பு வசதிகளை பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments