Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச அணு சக்தி முகமை தலைவருடன் ககோட்கர் சந்திப்பு!

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (16:57 IST)
சர்வதேச அணு சக்தி முகமையின் தலைவர் எல் பராடியை சந்தித்த இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர், சர்வதேச அளவில் அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து பேசியுள்ளார்!

ஆஸ்ட்ரிய தலைநகர் வியன்னாவில் சர்வதேச அணு சக்தி முகமையின் (International Atomic Energy Angecy - IAEA) 51வது மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் ககோட்கர், மொஹம்மது எல் பராடிக்கு விருந்தளித்தார்.

இந்த விருந்திற்கிடையே இந்தியா மேற்கொண்டுவரும் அணு சக்தி திட்டம் குறித்து எல் பராடியுடன் ககோட்கர் பேசியுள்ளார்.

" சர்வதேச அணு சக்தி முகமையின் பல்வேறு திட்டங்களில் இந்தியாவையும் இணைத்துக் கொள்வது குறித்துப் பேசியதாகவும், குறிப்பாக அணு சக்தி சுழற்சி திட்டத்தில் இந்தியா இணைவது குறித்தும், அதன் மூலம் பாதுகாப்பான, செலவு குறைவான அணு மின் சக்தி உற்பத்திக்கு வழிகாணும் திட்டத்தில் ஈடுபடுவதற்குள்ள இந்தியாவின் விருப்பத்தை தெரிவித்ததாகவும்" பி.டி.ஐ. செய்தியாளரிடம் ககோட்கர் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் கீழ் சர்வதேச முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ள அணு மின் உலைகளுக்கென தனித்த கண்காணிப்புத் திட்டத்தை உருவாக்குவது குறித்துப் பேசுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அப்படிப்பட்ட முக்கிய விடயங்கள் விருந்தில் விவாதிக்கப்படுவதில்லை என்று ககோட்கர் பதிலளித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments