Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்தில் விமான விபத்து : 66 பேர் பலி, 40 பேர் காயம்!

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2007 (19:05 IST)
தாய்லாந்து விமானம் ஒன்று 123 பயணிகளுடன் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானதி்ல் 66 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்!

தாய்லாந்து நாட்டின் விமான நிறுவனமான ஒன்டுகோ எனும் பயணிகள் விமானம், அந்நாட்டின் உலகப் புகழ்பெற்ற ஃபுக்கெட் விமான தளத்தில் கடுமையான மழை பொழிவிற்கு இடையே தரையிறங்கும் போது விபத்திற்குள்ளனாது.

விபத்திற்குள்ளான விமானத்தின் ஒரு பகுதி தீப்பிடித்தது. உடனடியாக தீயணைப்பு வண்டிகள் தீயை அணைத்தன. அப்பொழுது விமானத்தின் ஒரு பகுதி வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 66 பேர் கொல்லப்பட்டதாக ஃபுக்கெட் மாகாண துணை ஆளுநர் கூறியுள்ளார். படுகாயமுற்ற 42 பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 பேர் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments