Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டிகளுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் : சீனா கவலை!

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2007 (12:41 IST)
அடுத்த ஆண்டு பீஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று சீனத்தின் பொது பாதுகாப்பு அமைச்சர் சாவ் யோங் காங் கூறியுள்ளார்!

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த சர்வதேச மாநாட்டில் பீஜிங்கில் இன்று துவங்கியது. பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 32 நாடுகளின் 140 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் பேசிய அமைச்சர் சாவ் யோங் காங், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான பொதுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறைபடுத்தப்பட்டுள்ளது என்றாலும், பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகியவற்றின் சவால்களை எதிர்கொள்ளும் சூழ்நிலை உள்ளது என்றும், பயங்கரவாதம் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

சர்வதேச காவல் துறையான இன்டர்போல், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இம்மாநாட்டில் பேசிய அமைச்சர், ஒலிம்பிக் போட்டிகள் அனைத்து நாட்டு மக்களின் மகிழ்ச்சியான கூடலாக ஆகும் அதே நேரத்தில், அது பயங்கரவாதிகளின் மிகப் பெரிய இலக்காகவும் உள்ளது என்று கூறினார்.

எந்தெந்த பயங்கரவாத இயக்கங்களினால் இப்படிப்பட்ட அச்சுறுத்தல் உள்ளது என்று சீன அமைச்சர் குறிப்பிட்டு கூறாவிடிலும், திபெத் விடுதலை கோரும்ம் தீவிரவாதிகள், கிழக்கு துர்கிஸ்தான் பிரிவினைவாதிகள் ஆகியோரிடம் இருந்து அச்சுறுத்தல் உள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்ததாக சீனா டெய்லி நாளிதழ் கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தா பிரச்சினை இல்ல.. தேர்தலில் போட்டியிடலாம்! - சட்டத்தை மாற்றிய சந்திரபாபு நாயுடு!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்.. ஏஆர் ரஹ்மானின் பதிவு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..! விரைவில் கைதாவாரா?

அரசு பள்ளிகள் ஆள் மாறாட்டம்? 10 ஆயிரம் போலி ஆசிரியர்களா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

Show comments