Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈராக் போரில் வெற்றி பெற முடியும் - புஷ் நம்பிக்கை

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2007 (10:46 IST)
ஈராக் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று தான் நம்புவதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.

சிட்னியில் நடைபெற்ற ஆசிய- பசிபிக் பொருளாதாரப் பேரவைக் கூட்டத்தில் ஆஸ்ட்ரேலிய பிரதமர் ஜான் ஹோவட்டுடன் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜார்ஜ் புஷ், இராக் போரில் வெற்றி பெற முடியும் என்பதால்தான் இந்த அளவிற்கு அமெரிக்கப் படைகளை அங்கு நிறுத்தியுள்ளோம். தீவிரவாதிகளுக்கும், கொலைகாரர்களுக்கும் எதிராக கடுமையாக போர். ஆயினும் வெற்றி சாத்தியமே" என்று கூறியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இராக்கின் அன்பார் மாகாணத்திற்கு தான் சென்றிருந்ததாகவும், அப்பகுதி முற்றிலுமாக தீவிரவாதிகளின் கைகளுக்கு போய்விடவில்லை என்றும் கூறியுள்ள புஷ், அல் கய்டா எந்த நோக்கத்திற்காக செயல்படுகிறது என்பதனை புரிந்து கொண்டு உள்ளூர் மக்கள் மாறி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

மரணத்திலும் அழிவிலும் எங்களுக்கு நாட்டமில்லை. ஈராக்கைப் பொறுத்தவரை நமது இலக்கை எட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று புஷ் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

Show comments