Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஸ்ராவில் இருந்து பிரிட்டன் படைகள் வாபஸ்!

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2007 (17:51 IST)
ஈராக் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான பாஸ்ராவிலிருந்து பிரிட்டன் படைகள் திரும்பப்பெற்றுக் கொள்ளப்பட்டன.

தற்போது ஈராக் படை வீரர்களிடம் இந்த நகரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தூக்கிலடப்பட்ட ஈராக் முன்னாள் அதிபர் சதாம் ஹூசேனின் மாளிகை வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த முகாம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அதிகமாக இலக்காகும் இடமாக இருந்து வந்திருக்கிறது. தற்போது பிரிட்டன் படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதால் இந்த தாக்குதல்கள் குறையலாம் என்று இராக் ராணுவ தளபதிகள் தெரிவித்துள்ளனர்.

2003 ஆம் ஆண்டில் அமெரிக்கா, இராக் மீது போரைத் துவக்கியதிலிருந்து பிரிட்டன் படைகள் ஈராக்கின் தெற்கு பகுதிகள் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, ஆனால் பிறகு பாஸ்ரா நகர் உட்பட 3 அல்லது 4 மாகாணங்களை ஈராக் படையிடம் பிரிட்டன் ஒப்படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது படைகள் திரும்பப் பெறப்படுவது ஏன் என்பதற்கான காரணங்களை பாதுகாப்பு காரணம் கருதி பிரிட்டன் வெளியிட மறுத்துள்ளது.

பாஸ்ராவின் தெருக்களில் பொதுமக்கள் திரண்டு நின்று பிரிட்டன் படை திரும்பச் செல்வதை ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

Show comments