பலாலி முகாம் மீது புலிகள் தாக்குதல்

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007 (12:35 IST)
யாழ்பாணத்தில் சிறிலங்க ராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பலாலி முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று காலை 8.45 மணியளவில் நீண்ட தூர பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர் என்றும், பீரங்கி குண்டுகள் பலாலி முகாமிற்குள் வந்து விழுந்ததாகவும் கூறியுள்ள சிறிலங்க பாதுகாப்பு அதிகாரி, அதற்கு பதலடி கொடுத்து சிறிலங்க ராணுவத்தினரும் பீரங்கிகளை கொண்டும், பல்குழல் ராக்கெட்டுகளைக் கொண்டும் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

தற்பொழுது சண்டை நின்று அமைதி நிலவுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

பலாலி மட்டுமின்றி, யாழ்குடா நாட்டில் உள்ள காங்கேசன் துறைமுகத்தின் மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக புதினம்.காம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகாலை 2 மணி முதல் நடந்த இத்தாக்குதலில் 130 மி.மீ. பீரங்கிகளைக் கைப்பற்றி எரிகணை தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தியதாக புதினம் செய்தி கூறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்தா? அமெரிக்க ராணுவத்தின் கைவரிசையா? 5 பேர் பலி

ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: புத்தாண்டில் உக்ரைன் அதிபர் அறிவிப்பு..!

விஜயை சிக்க வைத்த அஜித் வாக்குமூலம்!.. விரைவில் சம்மன்!.. பொங்கல் டெல்லியில்தானா?!...

யாருக்கும் பாரமா இருக்க மாட்டேன்!. பல லட்சம் செலவில் தனக்குத்தானே கல்லறை கட்டிய மனிதர்!..

மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய கணவர்.. புத்தாண்டில் பரிதாப நிகழ்வு..!

Show comments