ஈரான் அச்சுறுத்தல் அல்ல : ரஷ்யா!

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2007 (18:05 IST)
ஈரானால் சர்வதேச அமைதிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ரஷ்ய அயலுறவு அமைச்சர் செர்கீ லாவ்ரோவ் கூறியுள்ளார்!

கிர்கைஸ்தான் நாட்டின் தலைநகர் மிஷ்கேக்கில் நடைபெற்று வரும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு நாடுகளின் மாநாட்டிற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய லாவ்ரோவ், ஈரான் தலைவரின் அறிக்கையும், தங்களிடம் உள்ள தகவல்களும் ஈரான் சர்வதேச அமைதிக்கு ஒரு நீண்டகால அச்சுறுத்தலாக உள்ளதென கருத இடமளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட ஈரான் அதிபர் மொஹம்மது அகமது நேஜாத், ஐரோப்பாவில் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை நிறுவியதன் மூலம் ஈரானிற்கு மட்டுமின்றி, ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது என்று குற்றம் சாற்றினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...

கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..

பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...

இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...

எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...

Show comments