Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்கு யுரேனியம் ; பிரதமருடன் ஆஸி. பிரதமர் பேச்சு!

Webdunia
இந்தியாவிற்கு யுரேனியம் விற்பதெனவும், அது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஆஸ்ட்ரேலியப் பிரதமர் ஜான் ஹோவர்ட் கூறியுள்ளார்.

ஆஸ்ட்ரேலியத் தலைநகர் கான்பெராவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஹோவர்ட், இந்தியாவிற்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வது என்ற ஆஸி.யின் முடிவை பிரதமர் மன்மோகன் சிங் மகி்ழ்ச்சியுடன் வரவேற்றதாகக் கூறினார்.
அணு ஆயுத பரவல் தடுப்பில் இந்தியா சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது என்று கூறிய ஹோவர்ட், ஆஸி.யிடமிருந்து யுரேனியம் பெறுவதெனில் அதற்காக இந்தியா கடுமையான பாதுகாப்பு கண்காணிப்பிற்கு உட்படுத்திக்கொள்ள சம்மதிக்க வேண்டும் என்றார்.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே ஆஸி. யுரேனியம் விற்பனை தொடர்பான பேச்சு துவங்கும் என்றும் ஹோவர்ட் கூறினார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிண்டி கலைஞர் நூற்றண்டு மருத்துவமனை மருத்துவருக்கு கத்திக்குத்து.. ஒருவர் கைது..!

இந்த சமூகத்தில் விவாகரத்து பெற கணவருக்கு லட்சக்கணக்கில் பெண்கள் பணம் கொடுப்பது ஏன்?

திருவொற்றியூர் பள்ளியில் வாயுக்கசிவு விவகாரம்: மாணவிகளின் நாடகமா?

நாடு முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு தனி அடையாள அட்டை.. பணிகள் தொடக்கம்..!

தமிழகத்தை நெருங்குகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு: 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

Show comments