தாலிபான் தாக்குதல்: 4 பாகிஸ்தான் வீரர்கள் பலி

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2007 (13:40 IST)
பாகிஸ்தானில் பழங்குடி இன மக்கள் வாழும் பகுதியில் உள்ள ராணுவ சோதனை சாவடி மீது தாலிப ான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 தீவிரவாதிகளும், 4 பாகிஸ்தான் வீரர்களும், கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள வாஷிரிஸ்தான் பகுதி அருகே இராணுவ சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி மீது இன்று தாலிபான் ஆதரவு தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.

தீவிரவாதிகள் 50 ராக்கெட்டுகளை வீசி பயங்கர தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு வீ ரர ்களுக்கும் இடையே நடந்த பயங்கர சண்டையில் 10 தாலிபான் தீவிரவாதிகளும், 4 பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் வாஹீத் அர்சாத் தெரிவித்தார். மேலும, இதில் 4 பாதுகாப்பு வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதிக்குள் நுழைந்து இராணுவம் தாக்குதல் நடத்திய தொடர்ந்து அங்கு தற்கொலைப் படை தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 200 பேர் பலியாகினர். பலியானவர்களில் பொரும்பாலோனர் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் ஆவர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை.. இறப்பதற்கு முன் செய்த அதிர்ச்சி செயல்..!

பள்ளி மாணவர்களை தொழுகை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை

ராகுல் காந்தி ராணுவத்தை அவமதித்தாரா? பிரியங்கா காந்தி விளக்கம்

திருச்சியில் திகில்: கல்லறையில் இருந்து வந்த பிரியாணி ஆர்டர் - அலறியடித்து ஓடிய டெலிவரி பாய்!

தம்பி விஜய்க்கு ஒன்னும் தெரியல!.. நயினார் நாகேந்திரன் பேட்டி!...

Show comments