Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச் சோதனை நடத்தினால் ஒப்பந்தம் ரத்தாகும் : அமெரிக்கா!

Webdunia
சனி, 28 ஜூலை 2007 (18:43 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு சமூகத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர, எதிர்காலத்தில் இந்தியா அணு ஆயுதச் சோதனை நடத்துமானால் இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் ரத்தாகிவிடும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகக் கூறியுள்ளது!

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தத்தின் உள்ளீடுகளை விளக்கி வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் சார்புச் செயலரும், அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவருமான நிக்கோலாஸ் பர்ன்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

" சமூக ரீதியிலான அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்வதே இந்த ஒப்பந்தமாகும். அதன் விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வாஷிங்டன் விரும்புகிறது. எதிர்காலத்தில் இந்தியா அணு ஆயுதச் சோதனை நடத்தினால், இந்த ஒப்பந்தத்தின் கீழ் அதற்கு அளிக்கப்பட்ட அணு சக்தி தொழில்நுட்பத்தையும், எரிபொருளையும் திருப்பித் தந்துவிட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது" என்று நிக்கோலாஸ் பர்ன்ஸ் கூறியுள்ளார்.

அப்படியானால், 1971 ஆம் ஆண்டு இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, தாராப்பூர் அணு மின் நிலையத்திற்கு அளித்து வந்த யுரேனியத்தை நிறுத்தியது போன்ற நிலைமை எதிர்காலத்திலும் ஏற்படும் நிலை உள்ளதே என்று செய்தியாளர்கள் வினவியதற்கு, இப்படிப்பட்ட உத்தேசமான கேள்விகளுக்கு பதிலளிப்பது எனக்கு கடினமாக உள்ளது என்று கூறிய நிக்கோலாஸ் பர்ன்ஸ், அணுச் சோதனை நடத்தினால் இந்த ஒப்பந்தத்தின் கீழ் அளிக்கப்பட்ட தொழில்நுட்பம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று அமெரிக்கச் சட்டம் வலியுறுத்துகிறது. அதனை நாங்கள் இந்தியாவுடனான 123 ஒப்பந்தத்தில் தெளிவாக்கியுள்ளோம் என்று கூறினார்.

தங்களுக்கு அளிக்கப்படும் அணு எரிபொருளை பயன்படுத்தியதற்குப் பிறகு மறு ஆக்கம் செய்ய தனித்த ஒரு மையத்தை உருவாக்கி அதனை சர்வதேச அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர இந்தியா ஒப்புக்கொண்டதே 123 ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதில் அடிப்படையான ஒரு திருப்புமுனையாக இருந்தது என்று நிக்கோலாஸ் பர்ன்ஸ் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தா பிரச்சினை இல்ல.. தேர்தலில் போட்டியிடலாம்! - சட்டத்தை மாற்றிய சந்திரபாபு நாயுடு!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்.. ஏஆர் ரஹ்மானின் பதிவு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..! விரைவில் கைதாவாரா?

அரசு பள்ளிகள் ஆள் மாறாட்டம்? 10 ஆயிரம் போலி ஆசிரியர்களா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

Show comments