Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் லால் மசூதி அருகே குண்டு வெடிப்பு : 12 பேர் பலி

Webdunia
சனி, 28 ஜூலை 2007 (11:59 IST)
பாகிஸ்தானில் லால் மசூதி அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ் பெற்ற லால் மசூதியை தீவிரவாதிகளிடம் இருந்து ராணுவம் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து மசூதியையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

லால் மசூதியை ராணுவம் கைப்பற்றியதை அடுத்து பாகிஸ்தானில் தொடர்ந்து தற்கொலை படைத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை லால் மசூதி அருகே உள்ள முசாபர்கார் என்ற ஓட்டல் அருகே பயங்கர குண்டு வெடித்தது.

இதில் அந்த இடத்திலேயே 4 காவலர்கள் உள்பட 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தா பிரச்சினை இல்ல.. தேர்தலில் போட்டியிடலாம்! - சட்டத்தை மாற்றிய சந்திரபாபு நாயுடு!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்.. ஏஆர் ரஹ்மானின் பதிவு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..! விரைவில் கைதாவாரா?

அரசு பள்ளிகள் ஆள் மாறாட்டம்? 10 ஆயிரம் போலி ஆசிரியர்களா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

Show comments