Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல் கய்டா எங்கிருந்தாலும் தாக்குவோம் : அமெரிக்கா!

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2007 (13:57 IST)
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியுள்ள அல் கய்டா பயங்கரவாதிகள் மீது நேரடித் தாக்குதல் நடத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று தாங்கள் பாகிஸ்தானிற்கு தெரிவித்துவிட்டதாகவும், ஆனால் அல் கய்டா மீது தாக்குதல் நடத்தும் உரிமையை விட்டுத்தராது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது!

ஒசாமா பின் லேடனை பிடிக்க பாகிஸ்தானிற்குள் அமெரிக்கா எந்தவிதமான நேரடி நடவடிக்கையையும் மேற்கொள்ள அனுமதிக்கமாட்டோம் என்று பாகிஸ்தான் அயலுறவு அமைச்சகம் கூறியுள்ள நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

" பாகிஸ்தானிற்குள் அமெரிக்கா ஊடுருவி தாக்குதல் நடத்தப் போகிறது என்கின்ற கருத்து நிலவுகிறது. ஆனால், அப்படிப்பட்ட தன்னிச்சையான ராணுவ நடவடிக்கை திட்டம் எதுவும் இல்லை என்பதை இஸ்லாமாபாத்திற்கு தெளிவுபடுத்துகின்றோம். அதே நேரத்தில் பாகிஸ்தானிற்குள் இருக்கும் அல் கய்டாவின் நிலைகளைத் தாக்கும் உரிமையை விட்டுத்தர முடியாது" என்று வெள்ளை மாளிகை பத்திரிக்கை தொடர்புச் செயலர் டோனி ஸ்னோ கூறியுள்ளார்.

தாக்குதலிற்குரிய இலக்குகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எங்களிடமே உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் இறையாண்மையுடன் கூடிய ஒரு அரசு என்பதை நாங்கள் உணர்ந்துள்ளது மட்டுமின்றி, அது பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றி வருகிறது என்று டோனி ஸ்னோ கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அரசிற்கும், அல் கய்டா இயக்கத்தினர் பதுங்கியிருப்பதாக கூறப்படும் வசீரிஸ்தான் மாகாணத்தில் உள்ள பழங்குடியினருக்கும் இடையே ஒரு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் வினவியதற்கு, பாகிஸ்தானின் இறையாண்மையுடன் கூடிய அரசுடன் அமெரிக்கா பேசி வருகிறது. அதே நேரத்தில் வசீரிஸ்தானில் பழங்குடி தலைவர்களையும் அணுகும் திட்டம் உள்ளது என்று டோனி ஸ்னோ கூறியுள்ளார்.

" நாங்கள் எங்கள் முடிவில் உறுதியாக உள்ளோம். அதேபோல, பாகிஸ்தானும் அதன் முடிவில் உறுதியாக உள்ளது. எங்களுக்காக அவர்கள் விட்டுத் தந்துள்ளார்கள்" என்று ஸ்னோ கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து விவகாரம்: துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!

இந்தி உள்பட தாய் மொழியில் மருத்துவ படிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு..!

Show comments