Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹனீஃப் சிம்கார்ட் ஜீப்பில் கிடைக்கவில்லை!

Webdunia
வெள்ளி, 20 ஜூலை 2007 (14:16 IST)
கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது நடந்த தற்கொலைத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஜீப்பில் இருந்துதான் இந்திய மருத்தவர் ஹனீஃபின் செல்பேசி சிம்கார்ட் கண்டெடுக்கப்பட்டது என்ற தகவல் தவறு என்பது தெரியவந்துள்ளது!

கிளாஸ்கோ விமான நிலையத் தாக்குதல் நடந்து முடிந்த நீண்ட நேரத்திற்குப் பிறகே ஷபில் அகமதுவிடம் (கிளாஸ்கோ தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்) இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் ஒன்றில் மருத்துவர் ஹனீஃபின் சிம்கார்ட் இருந்ததென ஆஸ்ட்ரேலிய காவல்துறை பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக ஆஸ்ட்ரேலிய ஒளிபரப்புக் கழகத்தின் வானொலி செய்தி கூறியுள்ளது.

ஹனீஃபின் சிம்கார்ட் கைப்பற்றப்பட்டதை வைத்தே கிளாஸ்கோ தாக்குதலில் அவர் ஈடுபட்டுள்ளார் என்று ஆஸ்ட்ரேலிய காவல்துறை முதலில் கூறியது.

முன்னுக்குப் பின் இப்படிப்பட்ட முரண்பட்ட விவரங்களை தாக்கல் செய்துள்ள ஆஸ்ட்ரேலிய காவல் துறையின் மீது நீதிமன்றத்தில் புகார் செய்யப்படும் என்று இந்திய மருத்துவர் ஹனீஃபின் வழக்கறிஞர் பீட்டர் ரஸ்ஸோ கூறியுள்ளார்.

கிளாஸ்கோ தாக்குதலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஹனீஃபிற்கு தொடர்பு ஏதாவது இருந்ததா என்பதனை வெளிப்படையான விசாரணையின் மூலமே அறிந்துகொள்ள முடியும் என்று பீட்டர் ரஸ்ஸோ கூறியுள்ளார். (யு.என்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments