Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹனீஃப் பிணையில் விடுதலை!

Webdunia
திங்கள், 16 ஜூலை 2007 (13:14 IST)
கிளாஸ்கோ விமான நிலையத்தை தகர்க்க நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு "உதவியதாக" குற்றம் சாற்றப்பட்ட இந்திய மருத்துவர் மொஹம்மது ஹனீஃபை பிணையில் விடுவிக்க ஆஸ்ட்ரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

கிளாஸ்கோ தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தனது செல்பேசியின் சிம் கார்டை அளித்துள்ளார் மருத்துவர் ஹனீஃப் என்றும், ஆனால் அவர் செய்தது குற்ற நோக்கிலான நடவடிக்கை அல்ல என்றும் ஆஸ்ட்ரேலிய காவல்துறை கூறியிருந்தது.

இந்த நிலையில், பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் மொஹம்மது ஹனீஃப் தாக்கல் செய்த பிணைய விடுதலை மனுவை விசாரித்த நீதிபதி, ஆஸ்ட்ரேலிய டாலர் 10,000 செலுத்தி ஹனீஃப் பிணைய விடுதலை பெறலாம் என்று உத்தரவிட்டார்.

ஹனீஃப் ஆஸ்ட்ரேலியாவை விட்டு வெளியேறக் கூடாது என்றும், வாரத்தில் 3 முறை பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

ஹனீஃப் ஆஸ்ட்ரேலியாவை விட்டு வெளியேறக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதையடுத்து அந்நாட்டு குடியேற்றத் துறை ஹனீஃபிற்கு வழங்கப்பட்டிருந்த விசாவை ரத்து செய்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments