Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்கள்: 37 பேர் பலி

Webdunia
திங்கள், 16 ஜூலை 2007 (10:29 IST)
பாகிஸ்தானில் ராணுவத்தினர், காவல் துறையினர் மீது தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் உட்பட 37 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் தொடர் தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் சுவாத் எனும் மலைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, வெடிகுண்டு நிரப்பிய கார் ஒன்றை ஓட்டி வந்த தற்கொலை படை தீவிரவாதி, ராணுவத்தினர் சென்ற கார் மீது மோதச் செய்தான். மேலும், மறைந்திருந்த தீவிரவாதிகளும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 13 ராணுவ வீரர்களும், பொது மக்கள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். காயமடைந்த ராணுவ வீரர்கள் அனைவரும் அருகில் உள்ள மட்டா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில்கான் நகரில் காவல் துறை பணிக்கு ஆட்கள் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகினர். 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments