Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிழக்கில் போர் முடிந்துவிடவில்லை : விடுதலைப் புலிகள்!

Webdunia
வியாழன், 12 ஜூலை 2007 (14:47 IST)
இலங்கையின் கிழக்குப் பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக சிறிலங்க ராணுவம் கூறியுள்ள நிலையில், கொரில்லா தாக்குதல் முறையை தொடருவோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்!

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த குடும்பிமலைப் பகுதியை சிறிலங்க ராணுவம் கைப்பற்றியதை அடுத்து கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்துப் பகுதிகளையும் பிடித்துவிட்டதாகவும், கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பகுதியும் மீட்கப்பட்டுவிட்டதென சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருந்தது.

இதுகுறித்து பி.பி.சி. செய்தி நிறுவனம், விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையனை நேர்காணல் செய்தது, கிழக்கில் போர் முடிந்துவிட்டதாக கூறுவது தவறு என்று கூறியுள்ளார்.

" அவர்கள் (சிறிலங்க அரசு) கிழக்கில் போர் முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். அது உண்மையல்ல. கெரில்லா போர் முறையில் 24 ஆண்டு அனுபவம் எங்களுக்கு உண்டு. இப்பகுதியில் சில வாரங்களுக்கு முன்னரே கெரில்லா தாக்குதலைத் தொடங்கிவிட்டோம்" என்று கூறியுள்ள இளந்திரையன், பெரும் பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது வேறு, அப்பகுதியில் தாக்குதல் இல்லாமல் தடுப்பது என்பது வேறு. சிறிலங்க ராணுவம் சில இடங்களை இழப்பதும், சில இடங்களை கைப்பற்றுவதும் நடப்பதுதான். நாங்கள் முறைசார்ந்த, முறைசாராத அனைத்து யுக்திகளையும் தொடர்ந்து கையாள்வோம். ஆங்காங்கு உள்ள எங்களது படை பலத்தைப் பொறுத்து அதனை முடிவு செய்வோம்" என்றும் இளந்திரையன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல்லா கூறுகையில், "கிழக்குப் பகுதியில் அங்கும், இங்குமாக புலிகள் தாக்குதல் நடத்தலாம். ஆனால், அவைகளை எதிர்கொள்ள ராணுவம் தயாராகவே உள்ளது" என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

Show comments