Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை பிரச்சனை: புலிகளுடன் நார்வே தூதர் பேசினார்

Webdunia
புதன், 11 ஜூலை 2007 (16:47 IST)
இலங்கை இனப்பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வுகாண மீண்டும் பேச்சுவார்த்தை துவங்குவது குறித்து விடுதலை புலிகளுடன் இலங்கைக்கான நார்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கர் பேசியுள்ளார்.

ஸ்ரீலங்க அரசின் அனுமதியுடன் கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்கு வந்த நார்வே தூதர் பிராட்ஸ்கர், அங்கு விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், ராணுவ பேச்சாளர் இளந்திரையன் ஆகியோர் கொண்ட குழுவினருடன் ஒன்றரை மணி நேரம் பேசினார்

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிராட்ஸ்கர், அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே நார்வேயின் நோக்கம் என்று கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளும், ஸ்ரீலங்க அரசும் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பதே இலங்கை கொடை நாடுகளின் விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழல், பாதுகாப்பு, மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பானவை இன்றைய சந்திப்பில் பேசப்பட்டதாக புதினம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அமைதி முயற்சிகளில் முக்கிய பங்கு ஆற்றிய பிராட்ஸ்கர் இன்னும் இரண்டு வாரத்தில் தனது தூதர் பொறுப்பில் இருந்து விடை பெறுகிறார் என்பது குறிப்பிடதக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments