Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஷாரஃப் விமானத்தை நோக்கி ராக்கெட் வீச்சு

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2007 (15:52 IST)
ராவல்பிண்டி விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் இருந்த விமானத்தை நோக்கி ராக்கெட் ஒன்று வீசப்பட்டது மட்டுமின்றி விமான தகர்ப்பு பீரங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்லாமாபாத் செய்திகள் கூறுகின்றன.

ராவல்பிண்டி விமான நிலையத்தில் இருந்து பலுசிஸ்தான் நோக்கி முஷாரஃப் சென்ற விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக டான் நியூஸ் தொலைக்காட்சி செய்தி கூறியுள்ளது.

ராவல்பிண்டி விமான தளத்தை ஒட்டியுள்ள ஒரு வீட்டின் மாடியில் இருந்து விமான தகர்ப்பு பீரங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் டான் செய்தி கூறியுள்ளது.

ஆனால், அப்படிப்பட்ட தாக்குதல் ஏதும் நடைபெறவில்லை என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
( பி.டி.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிண்டி கலைஞர் நூற்றண்டு மருத்துவமனை மருத்துவருக்கு கத்திக்குத்து.. ஒருவர் கைது..!

இந்த சமூகத்தில் விவாகரத்து பெற கணவருக்கு லட்சக்கணக்கில் பெண்கள் பணம் கொடுப்பது ஏன்?

திருவொற்றியூர் பள்ளியில் வாயுக்கசிவு விவகாரம்: மாணவிகளின் நாடகமா?

நாடு முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு தனி அடையாள அட்டை.. பணிகள் தொடக்கம்..!

தமிழகத்தை நெருங்குகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு: 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

Show comments