Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: நாட்டோவிற்கு ரஷ்யா எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2007 (20:06 IST)
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்கா ஏற்படுத்துவது ரஷ்யாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது என்று ரஷ்ய அயலுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ் கூறியுள்ளார்.

நார்த் அட்லாண்டிக் டிரிட்டி ஆர்கனைஷேசன் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் ஐரோப்பிய தோழமை நாடுகளின் அமைப்பான நாட்டோ நாடுகளின் தூதர்களுடன் ரஷ்யா நடத்தி வரும் பேச்சுவார்ததையின் போது லாவ்ரோவ் இவ்வாறு கூறியுள்ளார்.

" ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்துவதும் கொஷோவோ பிரச்சனையும் ஐரோப்பிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான முக்கிய பிரச்சனைகளாகும். இது ராணுவ ரீதியான சம நிலையை பாதிக்கக்கூடிய அம்சங்களாகும்" என்று கூறிய லாவ்ரோவ், ரஷ்யாவும், நாட்டோ நாடுகளும் தங்களுடைய பாதுகாப்பு மற்றும் நிலதன்மை தொடர்பான நலன்களை பிரதிபலிக்கும் வகையில் அணுகு முறைகளை மாற்றிக்கொள்ளவேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய பாதுகாப்பில் பல அச்சுறுத்தல்கள் உள்ளன. அவைகளை வெளிப்படையான ஒத்துழைபின்றி தீர்த்துக்கொள்ள இயலாது. ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்து பேசும் அதே நேரத்தில் நாட்டோவின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளுக்கும் தீர்வுகாண தயாராக இருப்பதாக லாவ்ரோவ் கூறியுள்ளார்.




எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments