Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானிற்கு எஃப்-16 போர் விமானங்கள்! யு.எஸ். வழங்கியது!

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2007 (17:27 IST)
அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட போர்த் திறன் அதிகம் கொண்ட 36 எஃப்-16 விமானங்களை பாகிஸ்தானிற்கு அமெரிக்கா விற்றுள்ளது!

கடந்த 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எஃப்-16 ரக போர் விமானத்தை பாகிஸ்தானுக்கு விற்க அமெரிக்கா ஒப்புக் கொண்டது. இந்நிலையில் எஃப்-16 ரக போர் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கியிருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் மாமூத் கசூரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானுக்கு தேவையான போர் விமானங்களை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக கூறினார். தங்களுக்கு 86 எப்.16 ரக போர் விமானங்கள் தேவைப்பட்டதாக குறிப்பிட்ட கசூரி,ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் பின் தங்கியதால் முதல் கட்டமாக 36 போர் விமானங்கள் மட்டும் வாங்கியிருப்பதாக தெரிவித்தார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு திறனை மேம்படுத்தவும், எல்லைகளில் தாலிபான், அல் கய்டா தீவிரவாதிகள் ஊடுறுவலை கண்காணிக்கவும் புதிய சாதனங்களை வழங்கி உதவ அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தா பிரச்சினை இல்ல.. தேர்தலில் போட்டியிடலாம்! - சட்டத்தை மாற்றிய சந்திரபாபு நாயுடு!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்.. ஏஆர் ரஹ்மானின் பதிவு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..! விரைவில் கைதாவாரா?

அரசு பள்ளிகள் ஆள் மாறாட்டம்? 10 ஆயிரம் போலி ஆசிரியர்களா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

Show comments