Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓமனில் கடும் சூறாவளி: இந்தியர் உள்பட 12 பேர் பலி

Webdunia
வியாழன், 7 ஜூன் 2007 (17:54 IST)
ஓமன் நாட்டில் சூறாவளியுடன் கூடிய கன மழைக்கு இந்தியர் ஒருவர் உள்பட 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலரை காணவில்லை.

கோனு என்றழைக்கப்படும் புயலால் ஓமனில் கடந்த சில நாட்களாக சூறாவளியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால் கடலோரப் பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றனர்.

இதுவரை மழைக்கு 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அதில் ஒருவர் இந்தியர் என்றும், பலரை காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பொய்து வரும் கன மழையினால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான சேவையும் பாதிப்படைந்துள்ளது . இந்தியாவில் திருவனந்தபுரம், மங்களூர், கொச்சின் மற்றும் கோழிகோடு ஆகிய பகுதிகளில் இருந்து மஸ்கட் செல்லும் விமானங்கள் ரத்து செய்ய்ப்பட்டுள்ளன.

ஓமனில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருப்பதாககவும், அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments