Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் சண்டை: 20 பலி

Webdunia
கொழும்புவின் வடக்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில் ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயம் அடைந்ததாகவும் விடுதலைப்புலிகள் இணையதளத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த செய்தியை இலங்கை ராணுவ போர்ப்படையினர் மறுத்துள்ளனர். 3 வீரர்கள் பலியாயினர் என்றும், 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு இடையே உள்ள ராணுவ தளங்கள் மீது நேற்று முன் தினம் இரவு ( சனிக்கிழமை ) தாக்குதல் நடத்தியதாக விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இதில் இலங்கை போர்ப்படைக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாகவும், போர்ப்படை முகாம்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி அவைகள் அழிக்கப்பட்டத ா கவும் அவர் கூறியுள்ளார். இந்த சண்டை நேற்று வரை ( ஞாயிற்றுக் கிழமை ) நீடித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.




எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments