Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த முறை இந்தியாவும் சீனாவும் தப்பிப்பது கடினம்!

இந்த முறை இந்தியாவும் சீனாவும் தப்பிப்பது கடினம்!
, வியாழன், 10 மே 2012 (16:53 IST)
FILE
வளர்ச்சி, தொழிற்துறை மேம்பாடு என்ற பெயரில் அதிக அளவில் வெப்ப வாயுவை வெளியேற்றி சுற்றுச்சூழல் நாச நாடுகளாகத் திகழும் சில நாடுகளில் இந்தியாவும் சீனாவும் உள்ளது.

அடுத்த வாரம் ஜெர்மன் தலைநகர் பானில் அடுத்த வாரம் உலக சுற்றுச்சூழல் மாநாடு நடைபெறுகிறது. இதில் ஏழை நாடுகளும், ஏன் ஐரோப்பிய நாடுகளும் கூட இந்த முறை இந்தியாவையும் சீனாவையும் பதம் பார்க்காமல் விடப்போவதில்லை என்று தெரிகிறது.

மே 8அம் தேதி பிரசல்ஸில் கூடிய ஏழை நாடுகளின் பிரதிநிதிகளும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் ஏற்கனவே இந்தியாவையும் சீனாவையும் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கறாராக முன்வைக்கப்போகின்றனர்.

1992ஆம் ஆண்டு கியோடோ உடன்படிக்கை 1997ஆம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது வைக்கப்பட்ட அளவுகோல்களை இப்போது 2012-இல் வைக்க முடியாது என்று இந்த நாடுகளின் பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

சீனா இப்போது நம்பர் 1 கார்பன் வெளியேற்று சக்தியாக அதாவது சுற்றுச்சூழல் நாச சக்தியாக விளங்குகிறது.

அதாவது கரியமிலவாயு குறைப்பில் இனி வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் என்ற வேறுபாடு செல்லுபடியாகாது என்று மே 8 சந்திப்பில் ஏழை நாடுகள் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நடைபெற்ற வானிலை மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியம், ஏழை நாடுகளும், தீவுப்பகுதி நாடுகளும் வானிலை மாற்றங்களினால் கடுமையாக பாதிக்கப்படுவதால் வெப்ப வாயு வெளியேற்றத்தைக் குறைக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதையும், எந்த அளவில் எந்த நாடுகள் குறைக்க வேண்டும் என்பதையும் குறித்து 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் எட்டப்பட்டு 2020ஆம் ஆண்டு அவை அமல் செய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

கியோட்டோ ஒப்பந்தங்களின் படி இந்தியா, சீனா போன்ற அப்போதைய வளரும் நாடுகள் வெப்ப வாயு வெளியேற்றக் குறைப்பு குறித்த எந்த ஒரு சட்டரீதியான பிணைப்பு உள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டியதில்லை என்ற நிலை இருந்து வருகிறது.

இந்த பாதுகாப்பு நிலை அடுத்த வாரம் நடைபெறும் ஜெர்மனி வானிலை தொடர்பான சந்திப்பில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil