Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானிலை மாற்றங்களை தடுக்க வாழ்க்கை முறை மாறவேண்டும்!

Webdunia
வியாழன், 4 டிசம்பர் 2008 (12:16 IST)
புவி வெப்பமடைதலால் ஏற்பட்டு வரும் தீவிர வானிலை மாற்றங்களை தடுக்க நமது வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்று நோபல் பரிசு வென்ற, வானிலை மாற்றம் குறித்த ஐ. நா.வின் வானிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அமைப்பு தலைவர் டாக்டர் ஆர்.கே. பச்சௌரி தெரிவித்துள்ளார்.

" தொழில் நுட்பம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் என்று வாளாவிருக்க முடியாது, கரியமில வாயு வெளியேற்றத்தோடு, நிறைய கழிவுகளையும் நாம் வெளியேற்றுகிறோம். இதனையெல்லாம் குறைக்க நாம் ஏதாவது செய்தாகவேண்டும்" என்று "2009 சர்வதேச வானிலை சாம்பியன்கள்" என்ற பிரச்சாரத் திட்டத்தை துவங்கி வைத்து உரையாற்றுகையில் பச்செளரி தெரிவித்துள்ளார்.

நமது மரபு வாழ்க்கை மதிப்பீடுகளை கடைபிடித்து, தேவைக்கு அதிகமாக எதனையும் பயன்படுத்தக் கூடாது என்பதை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு வாழ்க்கை முறை மாறினால்தான் வானிலை மாற்றத்தின் அழிவிலிருந்து நாம் தப்ப முடியும் என்றார் பச்செளரி.

சுற்றுச்சூழல், வானிலை மாற்றம் ஆகியவற்றை பொறுத்தவரை இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டிப் பாடுபட முயல வேண்டும், இதற்காக இந்த பிரச்சாரத் திட்டத்தில் 60 இந்திய, 5 இலங்கை இளம் தலைமுறையினரை ஈடுபடுத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.

இந்த வானிலை மாற்ற திட்டத்தின் கீழ் பயிற்சியளித்து, விழிப்புணர்வை உருவாக்க பட்டறைகள் நடத்தப்படவுள்ளன.

இந்த இந்திய-இலங்கை கூட்டுத்திட்டம் பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய ஜி8+5 (பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜபன், மெக்சிகோ, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், அமெரிக்கா) திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments