Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 ஆண்டில் கடல் மட்டம் 1.1 மீட்டர் உயரும்: ஆய்வு!

Webdunia
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (17:14 IST)
புவி வெப்பமடைவதா‌ல் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் படலங்கள் உருகுவதால் அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 1.1 மீட்டர் அளவுக்கு உயரும் என திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய வானியல் ஆய்வு மையத்தின் நிதியுதவியுடன் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேம்படுத்தப்பட்ட ரிமோட் சென்ஸிங் மையம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கடல் மட்டம் உயருவதால் பொன்னேரி, புலிகாட், மாமல்லபுரம், புதுச்சேரியின் வடக்கு பகுதி, நாகப்பட்டினம், வேதாரண்யம், தூத்துக்குடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

2,100 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் கடல் மட்டம் 0.59 மீட்டர் உயரும் என அரசுகளுக்கு இடையிலான பருவநிலை மாற்றக்குழு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 5-பேர் நீரில் மூழ்கி பலி..! பயிற்சியின் போது நிகழ்ந்த பரிதாபம்..!

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படைகூட தெரியவில்லை..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி! உக்ரைன் போர் குறித்து புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

திராவிட மாடல் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை.. 2026 தேர்தலில் வெற்றி எங்களுக்கே: முதல்வர் ஸ்டாலின்..!

கோடநாடு கொலை வழக்கு: இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்.. சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

Show comments