Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதியாக குறைந்தன புலிகள்! - 'சுற்றுச்சூழலு‌க்கு கேடு'

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2008 (12:57 IST)
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை கட‌ந்த ஐந்து ஆண்டுகளில் பாதிக்கும் அதிகமாக குறைந்துள் ளது எ‌ன்ற அதிர்ச்சி தகவல் சமீபத்திய ஆய்வ ி‌ல் வெளியாகியுள்ளது.

நமது நா‌ட்டி‌ன் தேசிய விலங்கான புலிக‌‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை ப‌ற்‌றி கடந்த 2002 ஆம் ஆண்டு நட‌ந்த கணக்கெடுப்‌பி‌ல், நாடு முழுவது‌ம் 3,500 புலிகள் இருப்பதாக தெரியவ‌ந்தது. ஆனால ், சமீபத்திய கணக்கெடுப்பின்பட ி, வெறும் 1,411 புலிகளே உள்ளதாக தெரியவ‌ந்து‌ள்ளது.

நமது நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில் தான் அதிக புலிகள் (300) உள்ளன. அதற்கு அடுத்த ு, உத்தரகண்ட்டில் 178 புலிகளும ், உத்தரபிரதேசத்தில் 109-ம ், மரா‌ட்டிய‌த்‌தில் 103-ம ், ஆந்திராவில் 95-ம ், ஒரிசாவில் 45-ம ், ராஜஸ்தானில் 32-ம ், சத்‌தீ‌ஷ்கரில் 26-ம ், பிகாரில் 10-ம் உள்ளதாக கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்ற ன.

புலிகளின் இந்த உச்சகட்ட அழிவை உணர்ந்திருந்தும், நிலைமையை சமாளிக்கும் வகையில் 'பழைய கணக்கெடுப்பு முடிவுகள் தவறானவ ை' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பின செயலாளர் ராஜேஷ் கோபால் கூறுகையில ், " புலிகளின் காலடித்தடத்தை கொண்டு கடந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் அதிக தவறு நிகழ வாய்ப்புள்ளது. சமீபத்திய புலிகள் கணக்கெடுப்பு பு‌திய முறைக‌ளி‌ன்படி நடத்தப்பட்டுள்ளத ு.

தற்போது நாட்டின் 17 மாநில வனப்பகுதிகளில் புலிகள் உள்ளன. ஓட்டுமொத்த புலிகளின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 1,165 ஆகவும ், அதிகபட்சம் 1,411 ஆகவும் இருக்கலாம். எனினும ், புலிகள் பாதுகாப்பு வனப்பகுதி எல்லைக்கு அப்பால் குறைவான புலிகளே உள்ள ன" என்றார்.

' புலிகளின் எண்ணிக்கை குறைந்தால் மான் போன்ற தாவர உண்ணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். இது சுற்றுச்சூழ‌ல் பாதுகா‌ப்பை கேள்விக்குறியாக்கிவிடும ்' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். இவற்றை எல்லாம் கடந்த ு, புலி என்ற ஒரு அற்புதமான விலங்கின் இழப்பை நாட்டின் பொருளாதாரம் 15 புள்ளிகளாக உயர்ந்தால்கூட ஈடுகட்டிவிட முடியாது.

வாழ்வாதாரம் இ‌ன்ம ை, வேட்டையாடுதல் போன்ற முக்கிய காரணங்களால் புலிகளின ் எண்ணிக்க ை குறைந்துள்ளதாகவு ஒப்புக்கொள்ளும் அரசாங்கம், அவ‌ற்றை‌த் தடுக்க போதிய நடவடிக்கைகளை முடுக்கிவிட தயங்கி வருகிறது.

பங்குச்சந்த ை, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் இழப்பை வேண்டுமானால் சரிகட்டி விட முடியும ். ஆனால் இயற்கை செல்வத்தின் அழிவுக்கு எந்த மாற்றும் கிடையாது என்பதை அரசாங்கம் மட்டுமல்ல மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

புலிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வரும் இதேநிலை தொடர்ந்தால ், அழிந்துவரும் பட்டியலையடுத்த ு, புலி என்ற விலங்கை வருங்கால சந்ததியினருக்க ு வரைந்துதான் காண்பிக்கும் நிலைதான் ஏற்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments